பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சிறப்பாம். ஏழைப் பெற்றோராயின் மணச் செலவு நோக்கி ஒரு தொகை கேட்பது குற்ற மாகாது. த.தி.51.

பெரியாரைப் பின்பற்றுவோர்

பகுத்தறிவியக்கப் பகலவன் என்னும் பெரியார் தம் கற்பிப்பிற்கேற்ப,பிறவிக் குலவொழுங்கை மீறியே ஒரு பெண்ணை மணந்தார். அவரைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் பலர் மதவியல் ஒன்று தவிர மற்றவற்றில் அவர் பெயர் கெடுமாறே ஒழுகி வருகின்றனர். பிறவிக் குலவுணர்ச்சியைச் சொல்லளவில் நீக்கினும் உள்ளளவில் நீக்கவில்லை. த.இ.வ.319.

பெரும்பால் விரும்பும் இன்பம்.

இம்மையின்பமாகிய பெண்ணின்பமும் மறுமையின்ப மாகிய வீட்டின்பமும் ஒப்பு நோக்க வகையால் முறையே சிற்றின்பம் பேரின்பம் எனப்படினும், சிற்றின்பமே இயற்கைக் கேற்றதும் உடனே நுகர்தற்குரியதும் எளிதாய்க் கிட்டுவதும் கண்கூடாகக் காணப்பெறுவதுமாயிருத்தலால்

பெரும்பாலரால் விரும்பப்படுவதாம்.

பொத்தகக் குழு

அதுவே

த.தி. முன் 2.

தாளைச் சிக்கனமாகச் செலவிடவும் வழுவுள்ளனவும் பயனற்றனவுமான வெளியீடுகளைத் தடுக்கவும் பொத்தகக் குழுவொன்றும் இருப்பது நல்லது. த.இ.வ.311

பொதுநலத் தொண்டருள் தலையாயவன்

திங்களையடைந்து திரும்பிவரினும் நிலத்திலும் நீரிலும் வானிலும் ஒரு நிகராய்ச் செல்லும் விரைவூர் தியைப் புனையினும் உயிர் வாழ்விற்கு ன்றியமையாத உணவை விளைக்கும் உழவனைப் போன்ற பொது நலத் தொண்டன் இல்லை. ம.வி. 71 பொதுவுடைமை

பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன் படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும். ம.வி;நூ.முக.3 பொருள் விலை குறைப்பு

ஒரு பொருளின் விலை குறைப்பு முயற்சியை அது விளையும் அல்லது செய்யப்படும் இடத்திலேயே தொடங்குதல் வேண்டும்.