பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

என்பவை அச்சுக்கு அணியமாகவுள. இவ்வெல்லாம் பாவாணர் வரலாற்றுக்குக் கருவிநூல்களாக அமைவன. பின்னே 'பாவாணர் வரலாறு' வெளிப்படும். பாவாணரைப் பற்றிப் பிறர் உரைத் தவையும் தொகுக்கப் பெற்று வருகின்றன. நூலளவுக்குத் தக்க தொகுப்பு வாய்த்தபின் அஃதுருப்பெறும்.

பாவாணர் புலமை நலங்கண்டு 1931 முதலே அவரைத் தமிழுலக வைப்பாக ஆக்கியபெற்றியும் பெருமையும் ஒருங்கே உற்ற பெருந்தகை, மேனாள் கழக ஆட்சியர் தாமரைச்செல்வர் வ.சு. அவர்கள். வல்லான் வகுத்த அவ்வாய்க்கால், வழியே வழியாகச் சென்று பாவாணர் வரிசை வெளிப்பட ஏந்தாக இருப்பவர் இந்நாள் ஆட்சியாளர் திருமிகு இரா. முத்துக் குமாமரசாமி அவர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம் தமிழ்த்தொண்டன்

தமிழ்ச் செல்வம்

திருநகர், மதுரை-6

இரா. இளங்குமரன்

27.3.86