பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மூவேந்தரும் முப்பேராசிரியரும்

முற்காலத்தில் தமிழைக் கெடுத்தவர் பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் அரச வேள்விவேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் போலும் மூவேந்தர்; இக்காலத்தில் தமிழைக் கெடுப்பவர் முத்தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.

வழக்காடியும் எதிர் வழக்காடியும்

வடமொழி தமிழைத்தாழ்த்தித்

த.வ.300

தொன்றுதொட்டு

அதற்குரிய அரியணையில் தான் இருந்து வருவதால், அதனைத் தாக்காது தமிழைக் காக்க முடியாது. வட மொழியைத் தாக்காதே தமிழை வளர்க்க வேண்டும் என்பார் வரலாற்றை அறவே அறியாதார் வடமொழிக்கும் தமிழுக்கும் இடைப்பட்ட உறவுநிலை வழக்காடிக்கும் எதிர் வழக்காடிக்கும் அல்லது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு வழக்காடி தன் எதிர் வழக்காடியைத் தாக்காது தன் வழக்கில் வெல்ல முடியாதோ, அங்ஙனமே தமிழையும் வடமொழியை விலக்காது அல்லது அதன் உயர்வொழிக்காது வளர்க்க முடியாது.

உரிமையை நாட்டல்

த.வ.300

தமிழுக்கும் ஆரியம் என்னும் சமற்கிருதத்திற்கும் இடைப் பட்ட உறவு தன் உரிமை இழந்த வழக்காடிக்கும் பிறன் உரிமையைக் கவர்ந்த எதிர் வழக்காடிக்கும் இடைப் பட்டதாதலால் ஒரு வழக்காட்டோ போராட்டமோ இன்றித் தமிழை வடமொழியினின்று மீட்க முடியாது. தமிழ் விடுதலையே று தமிழன் விடுதலை. (Y. OLOTY). 1.1:4

உயிரும் உடம்பும்: ஆடையும் அணியும்

தமிழல் திராவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடி ப்படையும் முக்கியமுமான பகுதிகளிலெல்லாம் தமிழே யென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புற வணியில்மட்டும் ஆரியந் தழுவினவென்றும் அவ்வாரியமும் தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும் வட மொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரியதோர் ஏமாற்ற மென்றும் தெரிந்து கொள்க.

தி.தா.112