பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

335

நடைப்பரிகாரம் அனுப்பினாரெனின், அம் முதலமைச்சர்க்கு நன்றி கூறுவதல்லது அப் புகைவண்டிக்கு நன்றி கூறுவது பொருந்துமோ?

துறவியும் ஆண்டியும்

த.தி.53

செல்வத் தொடர்பிருந்தும் சிறிதும் பற்றின்றிச் செல்வத்தைத் திருத் தொண்டிற்கும் பொது நலத்திற்கும் பயன்படுத்தி, தவத்திருக் குன்றக்குடியடிகள் போல் இடையறாது எழுத்தாலும் சொல்லாலும் மக்கட்கு அறிவுறுத்திவரும் துறவியர் ஒரு சிலரே, துவராடை யணிந்து இரந்து பிழைப்பவர் ஆண்டியரேயன்றித் துறவியராகார். திருக. மர. துறவு. முக.