பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனை கொன்றான்

3. பிறமொழி

ஆனை கொன்றான் என்னும் மலைப்பாம்பு ஓர் யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று, இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்வி விட்டது.

இரவலன் புரவலனாதல்

த.இ.வ.நூ.மு.

ஆரியர் வருமுன்பே தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கும் ஏற்ற பலதுறையிலும் உயர்நாகரிக மடைந் திருந்தனர். தமிழர் கண்ட கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் பெயர்க்கப்பட்டும் விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலையறிஞர் இதையறியாது இந்திய நாகரிகம் முழுதும் ஆரியதென மயங்கிவிட்டனர். இஃது, ஓர் இரவலன் தன் சூழ்ச்சியாற் புரவலனான பின், அவனை அரசர் குடிப்பிறந்த வனாகக் கருதுவதொத்ததே.

விளக்கிலா இருள்வழி

வ.வ.32

ஆரியர் வருமுன்னரே தமிழ் முத்தமிழாய்வழங்கிய தாதலின், ஒருவர் எத்துணைக் கலைபயில்தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் வாய்ந்தவர் எனினும் ஆரிய வேதங்களை இசை முதனூலாகக் கொண்டு ஆராயின் விளக்கின்றிப் புத்திருள் வழி போவார் போல் இடர்ப்படுவாராவர்.

பெயரன் பாட்டனைப் பெற்றான்

குரலே சட்சம். செ.செ. 20, 33

கீழையாரியமும் வட இந்தியப் பிராகிருதமும் சேர்ந்து வேதமொழியும், தமிழும் வேதமொழியும் சேர்ந்து சமற்கிருதமும்