பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

21

பேயைத் தமிழ்நாட்டினின்று ஓட்டுவேன். இதன்று இறைவனே என்னைத் தோற்றுவித்திருக்கின்றான். இது என் செயலன்று. இறைவன் செயலே"

"என் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதும் மேலையறிஞரின் ஆரிய மயக்கறுப்பதும், தமிழை மீண்டும் அரியணையேற்றுவதும் அகர முதலியல்லாத என் தனி நூல்களுள் இணையற்றதுமான The Lemurian Language and its Ramification" என்னும் ஆங்கில நூல் (500 பக்கம்) அச்சேறவிருக்கிறது"

-

2

1940 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய மடல் களுள் கிடைத்த செய்திகள் இவை. பாவாணர் தம் பிறவி நோக்கை உணர்ந்து வெளிப்படுத்தியவர் என்பதற்கு இவை போதுமல்லவோ!

உடை

காலையில் ஒரு கொள்கை; கடும்பகலில் ஒரு கொள்கை; மாலையில் ஒரு கொள்கை; மறுநாளிலும் இப்படியே மாற்றுவதுபோல் நடைமாற்றித் திரியும் கொள்கைமாறிகளை அல்லது குறிக்கோள் மாறிகளைக் காண்கிறோமே! இன்னும் விளங்கச் சொன்னால் காட்சி மாறுவது போல் மாறும் கட்சி மாறிகள் மல்கிப் பளிச்சிட்டுக் காட்டும் இம்மண்ணில் தான், புரிவு தெரிந்த நாளில் கொண்ட கொள்கையை இறுதிநாள் வரை நிலைநாட்டி - எவ்வளவு வன்கொடுமைச் சூறையாலும் அசைக்க முடியாத வகையில் மலையென நிலைநாட்டிச் சென்றவர் பாவாணர்.

J

1931 இல் "மொழியாராய்ச்சி ஒப்பியன் மொழி நூல் என்னும் பாவாணர் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளியாகியது. 1981 இல் நிகழ்ந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு விழாமேடையிலே, "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" பற்றிய ஆய்வுப்பொழிவின் நிறைவிலே தம் நெஞ்சாங்குலை வெடிப்புற்று என் பிறவி நோக்கு ஈதே என்பார் போலப் பேரா இயற்கையுற்றார்

பாவாணர்.

பாவாணர் தம்பிறவி நோக்காகக் கூறியவற்றை நிறை வேற்றினரா? நிறைவேற்றா தொழிந்தனரா? அவர் படைப்பை முற்றாக அறிந்தார்க்கு விளக்கம் வேண்டுவதில்லை. நிறை வேற்றினார் என்பது குறைவற விளங்கும்.

1.அவா. 2-5-81. 2.ஆ.மு.11-11-87.