பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

குற்றத்தைக் குணமாகக் கொள்ளல்

359

மொழி திருந்தாதார் வழங்கும் கார் பஸ் முதலிய சொற்களைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வது கீழ்மக்களின் ஐம்பெரும் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக் கொள்வது போன்றதே. த.க.கொ.த.19.

பயிரும் களையும்

தமிழ்ச் சொற்பயிர் கெடுமாறு அயற்சொற் களைகள் மலிந்துவிட்டதனால் பல தென்சொற்குப் பிற சொல் வாயிலாகவே பொருள் கூற வேண்டியதாயிற்று. த.க.கொ.த.17.

செல்வத்தமிழ்

பிறரிடம் கடன் கொள்ளவேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு,பிர்லா முதலிய பெருஞ் செல்வர் போல் தமிழும் பிற மொழிகளினின்று கடன் கொள்ளாது. த.த.க.கொ.த.21.

பொதுமகள் குலமகளைப் பழித்தல்

தமிழின் சொல்வளத்தையும் தனிப்பெருந் தூய்மையையும் ஆரியச் சொற் கலப்பால் அதற்குநேர்ந்துள்ள அழிவு நிலையையும் அறியாத மேலையர் தம்மொழி போல் தமிழையும் கருதிக் கொண்டு அதன் தூய்மையைத் தாக்குவது பொதுமகள் குலமகளின் கற்பைப் பழிப்பது போன்றதே. வ.மொ.நூ.வ.117.

அகக்கடன்:

திசைச் சொல் என்பன, செந்தமிழ் நிலத்து வழங்காது கொடுந் தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய திருந்திய சொற்களும் சொல்வழக்குகளுமே... இத் திசைச் சொற்கள் பெற்றோர் பிள்ளைகளினின்று கடன் கொள்வது போன்ற அகக் கடன் (Internal loan) என்று அறிக. வ.மொ.நூ.வ.2

மக்களும் சொற்களும்

மலையா,சிங்கபுரம், தென்னாப்பிரிக்கா முதலிய வெளிநாடு கட்குத் தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக வாழினும் அவர்களின் முன்னோராலும் தமிழ்நாட்டு உறவினராலும் அவர்கள் தமிழர் என்றே அறியப் படுதல்போல் தமிழ்ச் சொற்களும் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன் மொழிகளிற் சென்று வழங்கினும் அவற்றின்