பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

கருவி நிலையும் செய்பொருள் நிலையும்

363

சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக் குறிப்புமாகும். மண்ணும் மரமும் போலக் கருவி நிலைப்பட்டவை ஒலிக்குறிப்புக்கள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள்.

ஒட்டுநர், இழுப்பர்

மு.தா.மொ.5.

என் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலித் திட்டம் தள்ளப்பட்டு அதற்கு ஒரு குழு அமர்த்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இது ஒரு புகைவண்டியை ஓட்டுநர் ஒருவர்க்குத் தலைமாறாக (பதிலாக) அதை இழுத்துச் செல்ல ஒரு குழு அமர்த்தவேண்டுமென்று சொல்வது போன்றதே.

கொல்தெருவில் குண்டூசி விற்றல்

த.வ.341.

கடந்த இருபான் ஆண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கிடந்த எனக்கு, மீன் குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவது போலும், கொல்தெருவில் குண்டூசி விற்பது போலும், சாத்திரியார் (பி.எசு.சுப்பிரமணிய சாத்திரியார்) அவர்கள் மொழிநூல் துறைகளையுணர்த்த விரும்பியது, மிக வியப்பை விளைக்கின்றது. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - மதிப்புரை மறுப்பு, செ.செ. 25:464

தன்னை அறியான் அறியான்

மொழிநூல் துறையில் குழந்தைப் பருவத்திலுள்ள புலவர் சிலர் என் முன்னின்று சொல்லாராய்ச்சி பற்றிக் கூறுவதும், என் கூற்றை மறுப்பதும், "தேவதூதருங் கால்வைக்க அஞ்சுமிடத்திற்குள் முழு மக்கள் புகுகின்றனர். "(foolls enter where angels fear to tread") "தான் அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள்" (He who knows not he knows not is a fool) என்னும் ஆங்கிலப் பழ மொழியையும் பொன் மொழியையும் நினைவுறுத்துகின்றன.

தெ.மொ.7.9,12.