பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியும் அழகும்

7. பொருள்விளக்கம்

சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பதுபோல் வல்லோர் செய்யுட்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும். சொ.ஆ.க..

அரவணைத்தல்

பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து தழுவுந் தொழிலிற் சிறந்தவை. இதனால், முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும், பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக் கெழுந்தது. அரவு, பாம்பு; அணைத்தல் தழுவுதல். “மாசுண மகிழ்ச்சி" என்றார் திருத்தக்க தேவரும். (சீவக.நா.189) சொ.ஆ.க.6

அரும்பும் மலரும்

ஒருவினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும் பலர் அறிந்து வெளிப்படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். சொ.ஆ.க.8. அம்பல் - அரும்பு; அலர் விரிந்த மலர்.

இருதலை மணியன்

-

பாம்பு வகைகளுள் மங்குணி (மழுங்குணி) என்பதொன்று. அதற்குத் தலையும் வாலும் வேறுபாடில்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும் தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்ல