பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

பாட்டி பேர்த்தியிடம் நூற்கக் கற்றல்

379

மூவேந்தராட்சி படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருவதென்று இவரேவேறோரிடத்திற் கூறியிருந்தும் பாட்டி பேர்த்தியிடமிருந்து நூல் நூற்கக் கற்றுக் கொண்டாள் என்பது போல, தமிழவேந்தர்பிற்காலத் தாரியரிடம் அரசியல் திறங்களை அறிந்து கொண்டார் என்பது தம்முரணானதே.

தேனை வழித்தவன்

திருக். மர. 501.

தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல, பொருளின் அதிகாரச் சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்தரியல் பாதலால் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத் தலைவர் வினையும், இறுதி வரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் சிறிது வேறுபட்ட விடத்தும் அவரை வினையினின்று விலக்கி விடுவதும் இன்றியமையாதன என்பதாம். திருக். மர. 514 உண்மையும் தலைமையும்

விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயருக்கு நாகம நாயக்கன் இருந்தது போலன்றி, அவன் மகன் விசுவநாத நாயக்கன் இருந்ததுபோல் உண்மையான படைத் தலைவனே நிலையான படைத் தலைமைக்கு அமர்த்தப்படுவான். திருக்.மர 511

எட்சண் டெருமைத்தோல்

தென்னாலி யிராமனின் எட்சண் டெருமைத் தோல் (திலகாஷ்ட மகிஷ பந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல் வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திருப்பதால் படைத்தகையாலும் பகைவரை மருட்டலாம் என்றார். திருக். மர.768

அரம்

கடுமொழியையும் கையிகந்த தண்டத்தையும் ஈரரமாகவோ, இருபுறமும் அராவும் ஓரரமாகவோ கொள்க. திருக்.மர507.