பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

மறைமலையடிகள் நூலகம்

381

திருவள்ளுவர் முதல் மறைமலையடிகள் வரை பெரும்புலவர் எத்துணையர் தோன்றியிருப்பினும் அவரெல் லார் அறிவாற்றலை யும் தொகுத்து ஓரகத்தே தேக்கி, எண்ணற்றவர் வந்துண்ணினும் வற்றாவாரி போன்றும், எடுக்க எடுக்கக்குறையா உலவாக் கோட்டை போன்றும், நாடெங்கும் வறளினும் கேடறியா மூலபண்டாரம் போன்றும், புலவரெ ல்லாம் கூடும் பொது மண்டபம் போன்றும். ஆராய்ச்சியாளர்க் கெல்லாம் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) அளிக்கும் ஆவினன்குடி போன்றும், குன்றாது உணவு பெருக்கும் வட்டுப் பண்ணை போன்றும், பகைவரெல்லாம் கூடிமுற்றுகையிடினும் புறங்காட்டுவிக்கும் படைக்கலக் கொட்டில் போன்றும் தமிழ்மொழி இலக்கிய நாகரிகப் பண்பாட்டைக் காத்துத் தமிழுக்கு ஊறு நேர்வதைத் தடுக்கும் தனிக்காவற்கூடம் போன்றும் விளங்கும் ஒரு நூலகம் (மறைமலையடிகள் நூலகம்).

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு எவர்பட்ட அரும்பாடு செ. செ. 54:6

முற்றிற்று.