பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

29

முழுப்புரவாண்மை மேற்கொண்டுள்ளார். காலத்தால் செய்த அவர்தம் உதவி இல்லாக்கால், ஞானமுத்தனார், கணக்காயனார் பேறு எய்தியிரார்! கக்காய்ச்சியார்ஒருவர மணம் பூண்டிரார்! நம் அவர்க்கு அம்மூலவராம் பேற்றை அருளிய தோக்கசு நம் நன்றிக்கு என்றும் உரியவராவர்!

ஞானமுத்தர்க்கு நேர்ந்த நேர்ச்சி, இளமையிலேயே பெற்றோரை இழந்தது. அந்நிலைமை தேவநேசர்க்கும் உண்டாக விட்டது! ஆனால், தேவநேசர் கடைக்குட்டி ஆதலாலும், அவர்க்கு மூத்தோர், வாழ்க்கைப் பொறுப்பு ஏற்றுப் பணியாற்று வோராகவும் இருந்தமையாலும் அவரைத்தம் குடும்ப உறுப்பினரே தாங்கும் சூழல் உண்டாயிற்று; மூத்த அக்கையாரே அன்னையார் கடனை மேற்கொண்டமை துன்பின் இடையேயும் வாய்த்த இன்பாம். அவரே, கல்விப் பொறுப்பும் மேற்கொண்டமையும் அறிந்தோம். அவரே தேவநேசர் வாழ்க்கைப் பேற்றுக்கும் மூலவராக இருந்தமை, முன்னைத் தோக்கசார் உதவியொடு எண்ணத்தக்கதாகிச் சிறக்கின்றது!

"வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிதல்' பற்றிக் கூறுவார் திருவள்ளுவர். அவரே யாப்பினுள் (வரப்பினுள்) அட்டிய (தேக்கி நிறுத்திய) நீரையும் கூறுவார். அவ்வாறு தேவநேசப் பயிர்க்கு, வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தாராக அக்கையார் இருந்தார் எனின், யாப்பினுள் அட்டிய நீராக 'யங்' துரையார் இருந்தமை நெகிழச் செய்வதாம்! எந்த மண்ணிலும், எந்நாளிலும் துயர்த் துணையாம் அருளாளர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதற்குயங் துரைமகனார் சீரிய சான்றாம்! வாழ்நாளெல்லாம் கடன்பட்டும் கடன்பட்டும், மொழித் தொண்டுக்கே தாம் கடன் பட்டார் போல நூல்களைத் தொகுத்தும் ஆய்ந்தும் மொழி ஞாயிறாகத் திகழ வாய்த்த தேவநேசனுக்குக் கடனுதவி, அதன் வழியாகக் கற்பிக்கும் கடனேற்ற அவர் தொண்டு, உப்புக்கும் காடிக்கும் உடைக்கும் ஒதுங்கற்கும் உதவிய உதவியளவில் ஒழியுமோ? "பண்புடையார்ப் பட்டுண்டுலகம்" என்பதற்கு இன்னவை யல்லவோ எடுத்துக் காட்டுகள்!

தேவநேசன் மூளைக் கூர்ப்பு எண்மையானதா? எவர்க்கும் எளிதில் வாய்ப்பதா? 'சிறுப்பெரியா' ரெனத் திகழ்ந்தமையை அவர்தம் உயர்பள்ளிக் கல்வித் தகவே காட்டுகின்றதே! கடன் பட்டுக் கற்கும் ஒருவர் வாழ்விலே ஆக்கசுப்போர்டு என்னும் எருதந்துறையில் பணி கொள்ளும் கனவு தானும் முகிழ்க்குமோ? ஆங்கில இலக்கியத்தைக் கரைகாணும் அவாவும் உந்தி எழுமோ?