பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

கால்களில்லாத கால்சட்டை ஒன்றும்; கைகள் இல்லாத கைச்சட்டை ஒன்றும், தலைக்குல்லா என்னும் ஒன்றும் தந்தனர். அந்த மூன்றையும் அணிந்தால் அணிந்தால் எப்படி எப்படி இருக்குமாம்!

சிதம்பரனாரே சொல்கிறார்:

66

"மூன்றையும் அணிந்திடின் முண்டமே ஆகத்

தோன்றுவது அல்லது சொரூபம் தோன்றா(து}”

இத்தகைய உடை! காலுக்கு இரும்பு வளையம்! உண்பதற்குச் சட்டியும் கலையமும்!

பாளையங்கோட்டையில் இருந்து அன்று மாலையே கோயமுத்தூர்ச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சிதம்பரனார். சணல் நார் எடுக்கும் பொறியைச் சுற்றும் வேலை தரப்பெற்றது. அதனைச் சுற்றுதலால் கைத்தோல் உரிந்து இரத்தம் கசிந்தது. அதனைக் கண்ட சிறையதிகாரி அவ் வேலையை மாற்றினான். என்ன வேலை தந்தான்?

“எண்ணெய், ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப் பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட

அனுப்பினன்; அவனுடை அன்புதான் என்னே”

என்று கூறுகிறார் சிதம்பரனார். இவ் வேலை வாங்கியவன் தரும் உணவு என்ன?

“பழுத்த இலையும் புழுத்த காயும் வெந் நீரில் சேர்த்து வார்க்கிறான் குழம்பென.” சோற்றைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

நாட்டுக்கு உழைக்கும் நற்றவத்தை மேற்கொண்டவர்க்கு நல்லோர் உதவி எங்கும் கிட்டும்! எப்பொழுதும் கிட்டும்! சிறைச்சாலைக்குள்ளே இருந்த கைதிகளே வடையும் பாயசமும் பாலும் பழமும் வழங்கினர் என்றால், இவர் செய்யும் வேலையையும் தாமே செய்தனர் என்றால் நம்ப முடியுமா? சிவகாசி வழக்கில் தண்டனை பெற்ற ஆறுமுகம்பிள்ளை வடுகுராமன் என்பாரும், கோவை வழக்கறிஞர் சிவக் கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களும் இலக்குமணப் பிள்ளை அவர்களும் செய்த உதவிகள் எண்ணற்றனவாகும்.