பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

புலவரேறு புகழ்மாலை

நீர்க்காவிச் சட்டையினால் போர்த்த தேகம் நினைவெல்லாம் தமிழாக ஆன நெஞ்சம் சோர்வின்றித் தொண்டாற்றச் சுற்றுங் கால்கள்

சுடர்க்கவிகள் வடிக்கின்ற பொற்க ரங்கள் கூர்ந்தெதையும் நோக்குகின்ற விழிகள்; யாரும் கும்பிட்டார் தலைவணங்கும் அடக்கப் பண்பு சார்ந்தாரைச் சாரவைக்கும் இனிமை கொண்டான் சால்புடையான் வரதநஞ்சைப் புலமை யோனே. புலவனுக்குள் புலவனாய் நின்றான் என்றும் புதுமையிலே தமிழ்வளரச் செயல்பு ரிந்தான் நலங்கொழிக்கும் தமிழ்ப்பிழம்பாய் சின்னா ளேனும் நனிமுடங்கிக் கிடக்கட்டும் பின்வி ரிப்போம் அலங்கலினால் அடுக்குகின்ற அன்புச் சேய்காள் அதிகரிக்க நும்பணிகள் என்ற ஏறு

குலங்கல்விப் பெருமையிலே உயர்ந்தோன்; எங்கள் குணக்குன்றாம் வரதநஞ்சைப் புலமை யோனே.

127