பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

ஒன்று,எவரும் அவர்தம் இல்லத்திற்கு வெளியிலேயே இயற்கை அடைவது. மற்றொன்று, நாற்பது வயது தாண்டு முன்னரே இயற்கை அடைவது. 'விதிக்கு' 'விதிவிலக்கும்' இருக்கத் தானே செய்கின்றது! ஆனால் விதிக்கு முரணாகாதவாறே திருச் சிற்றம்பலனார் முடிவும் இருந்தது, விந்தையான செய்தியேயாம்.

திருச்சிற்றம்பலனாரின் மனைவியார், திருப்பழனிக்கு வழிபாடு செய்யச் சென்றார். அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய தந்தையார் பாலக்காட்டில் மருத்துவம் செய்து காள்வதற்காகச் சென்றிருந்தார். சென்று, மருத்துவம் செய்து திரும்பி வரும் வழியிலேயே இறைவனடி சேர்ந்தார். அவ்வாறே இவர்தம் இளவலாரும் மருத்துவமனைக்குச் சென்று மீண்டு வரும்வழியிலேயே மாண்டு போனார்! இவர்கள் அனைவரும் நாற்பது வயது கடவாத நிலையிலேயே மறைந்தவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலனார் நிலைமைதான் என்ன ஆயிற்று? அயராப் பணிகளுக்கு இடையே நோய்க்கு ஆட்பட்டார் திருச்சிற்றம்பலனார். அவ் வேளையில் பழனிக்குச் சென்று வழிபாடு செய்யவேண்டும் என விரும்பினார். ஆறாத் துயரையும் அறுமுகன் திருவருளே ஆற்றும் எனக் கொண்டு பழனிக்குச் சென்றார். உள்ளம் உருக,-கண்ணீர் வார-பண்ணிசை பாடிப் பைந்தமிழ் முருகனை வழிபட்டார்! எல்லாத் துயரும் நீங்கிச் சுமை இறக்கி வைக்கப்பெற்றார் போன்ற இன்பம் பெற்றார். ஆங்கிருந்தும் திரும்பி வரும் வழியில் தாராபுரத்தில் ஆம்பிரவதி ஆற்றின் கரையில் இறைவன் திருவடி சேர்ந்தார். அஃது 1904ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகும்.

வாழ்ந்த காலம் எத்தனை எத்தனை என்று எண்ணுவதினும், "வாழ்நாள்கள் எல்லாம் நன்முறையில் பயன்படுத்தப்பெற்ற வாழ்நாள்களாக இருந்தனவா?" என்று எண்ணுவதே தகுதியான தாகும். நூறாண்டு வாழ்ந்தாலும் வாணாளை வீணாள் ஆக்கி ஒழிவார் இல்லையா! "பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறந்ததாமே" என ஏசப் பேச நெடிது வாழ்வார் இல்லையா? பதினாறே ஆண்டுக் காலம் வாழ்ந்த திருஞான சம்பந்தரும்,