பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

157

பதினெட்டே ஆண்டுக் காலம் வாழ்ந்த சுந்தரரும், முப்பத்திரண்டே ண்டுகள் வாழ்ந்த மாணிக்கவாசகரும், முப்பத்து எட்டே ஆண்டுகள் வாழ்ந்த விவேகானந்தரும், முப்பத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்த பாரதியாரும் உலகு புகழ் பெருமையோடு வாழ்ந்தவர்கள் அல்லரோ! ஒருவர் வாழ்வு அவர் வாழ்ந்த வகையைப் பொறுத்ததே அல்லாமல், வாழ்நாள் அளவைப் பொறுத்தது அன்று என்னும் கருத்தைத் திருச்சிற்றம்பலனார் மறைவு நமக்குக் கற்பிப்பதாகும்!

முற்றிற்று.