பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

51

சங்கத்தார் ‘முதுபெரும் புலவர்', 'தமிழ்ப் பெருங்கவி' என்னும் பட்டங்களை வழங்கினர்.

தமிழ் மொழிக்கு வெ.ப. சு. செய்துள்ள பணிகள் பலவாம். இளமையிலே பெற்ற ஆராய்ச்சித் திறமையும், பாட்டியற்றும் தேர்ச்சியும் வர வர முதிர்ந்து பெருகின. இவற்றால் தமிழில் அரிய நூல்கள் சில தோன்றின.

அகலிகை வெண்பா, நெல்லைச் சிலேடை வெண்பா, சருவசன செபம், திருவாவடுதுறை அம்பலவாண தேசிகமாலை தனிக்கவித் திரட்டு என்பவை இவரியற்றிய செய்யுள் நூல்களாகும்.

சுவர்க்க நீக்க முதற்காண்டம், இந்திய நாட்டுக் கால்நடைக் காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணும் மிகக் கொடும் நோய்களைப் பற்றிய புத்தகம், கால்நடைகளுக்கு நோய்வராமல் அம்மை குத்தலும் அதன் பயன்களும் என்பவை மொழிபெயர்ப்பு உரைநடை நூல்கள் ஆகும்.

கம்பராமாயண சாரம் என்பது உரையும், உரைநடையும் அமைந்த நூல் ஆகும்.

இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்பது ஆராய்ச்சி நூல் ஆகும்.

இவருக்கு இருபத்து மூன்றாம் அகவையில் திருமணம் நடந்தது. ஆழ்வார் குறிச்சி இராமலிங்க முதலியார் என்பாரின் திருமகளார் வேலம்மையார் இவர் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இவர்தம் இனிய வாழ்வின் பயனாக உலகம்மை, கலியாணி என்னும் செல்வியர் இருவர் தோன்றினர்.பத்தொன்பது ஆண்டுகள் கணவர் வாழ்வே தம் வாழ்வு எனக்கொண்டு வாழ்ந்த வேலம்மையார் கொடிய நோய்க்கு ஆட்பட்டு இயற்கை எய்தினார். அதன் பின்னர்த் தென்காசி வட்டம் கிடாரங்குளம் இராமசாமி முதலியார் திருமகளார் வடிவம்மையாரை இரண்டாம் தாரமாக மணந்தார். அவர் வழியாகப் பழனியப்பன், தீர்த்தாரப்பன், செல்லம்மாள் என்னும் நன்மக்கள் தோன்றிக் குடிக்கு விளக்கம் செய்தனர்.

கல்வி, செல்வம், குடிநலம், செல்வாக்கு ஆகிய பலவும் ஒருங்கே அமைந்த வெ.ப. ச. வின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா 1-8-1937 இல் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நிகழ்ந்தது. பெரும்புலவர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் விழாத் தலைமை ஏற்றார்கள். எண்பது ஆண்டினை நினைவூட்டுமுகத்தான் எண்பது