பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பொருளாயிற்று! விலைபேசும் வாழ்வு விலங்கும் வாழ்வாமோ? வாழ்க்கைத் துணை' என்னின், பொருள் வழக்கு தலைக்காட்ட லாமோ?

ன்னவெலாம் காசுவின் உணர்வை உலுக்கியிருக்க வேண்டும். அப்பெண்ணைப் போற்றுதல் சமயத் தொடர்புடையதே என்ற அமைதி ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால் மகளிர் உரிமையை மனங்கொண்டுரைக்கிறார். தொழிலுரிமையைத் துலக்குகிறார்; கலப்பு மணத்தை வரவேற்கிறார்; கைம்மை நிலைக்குக்கரைந்து அவர்கள் மணத்தையும் ஏற்கிறார். அவர் தம்கு றிப்புக்களுள் சில:

ஒப்புரிமை

"தமிழர் தம் ஆதி நூல்களில் ஆண்மக்களுக்குப் பெண் மக்கள் அடிமை என்ற கருத்தில்லை.

குடும்பத்தலைவனாகிய தந்தையின் சொல்வழி பிறர் நிற்பதனால் குடும்ப ஒற்றுமை நிலைபெறும். தாய், தந்தைக்கு அமைச்சர் போல்பவள்.”

"தலைவன்பால் உள்ள அன்பு நிலை பெறுவதற்காக அவனிடத்தில் கடவுட் குணங்களைக் கண்டு பாராட்டும் வழக்கம் மிகுதிப்பட்ட காலத்தில் கணவனைத் தெய்வமாகப் பாவிக்கும் கொள்கை ஏற்பட்டது. தெய்வமாகக் கருதப்பட்ட கணவன் தெய்வம் போலக் கைம்மாறு கருதாது கருணை காட்டாது தன்னைத் தெய்வம் போலக் கருதி அதிகாரம் செலுத்தும் தன்னலம் மிகுந்தவனானபோது பெண்களிடம் கொடுமை காட்டும் வழக்கம் ஆண்மக்களுக்கு ஏற்பட்டது.

"பெண்களுக்குத் தன்னுரிமை கொடுப்பதே அறிவுக்குப் பொருத்தமானது என்னுங் கருத்துடைய திருவள்ளுவர், பெண் களை சிறையில்வைத்துக் காத்தல் பயனற்றது. அவர்கள் மன உறுதியினாலேயே தங்கள் கற்பைக் காத்துக் கொள்வது சிறந்தது என்றார்.”

66

'கம்பநாடார் கூறியபடி பொருந்து செல்வமும் கல்வியும் பூத்லால் மனமொத்த காதலுடைய இருவர் களவும் கற்பும் ஒன்றன்பின் ஒன்றாக நன்கு நடாத்தினர்.