பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

வழிபாட்டையும் அறிவுக்குப் பொருந்திய சடங்குகளையும் இகழ்தல் கூடாது.

உறுப்பினர் கடவுளன்பையும் நல்லொழுக்கத்தையும் போற்ற வேண்டும். எத்தகைய சடங்குகளையும் செய்ய வேண்டிய தில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் தமிழ் உயர்மொழி யென ஒப்புக்கொள்வராயின் அவர்கள் பற்றாளராகச் செல்லலாம். அவர்கள் உறுப்பினராகச் சேர இடமில்லை. தமிழர் சமய சங்கத்துக்கு ஒவ்வோர் ஊரிலும் கிளைச்சங்கம் நிறுவப்பட வேண்டும.

தமிழருக்குள் சமய ஒற்றுமை ஏற்படுமாயின் அது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாகும். சமுதாயச் சீர்த்திருத்தத்துக்குச் சமயம் தடையாகா தென்ற கருத்து நமக்குள் பரவவேண்டும். தமிழர் சமய சங்கம் கிளைகளோடு செழித்துத் தழைத்துச் சிறப்புற் றோங்கும்படி தமிழ் நன்மக்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து இடை விடாது உலைவின்றி முயல வேண்டும்.

இவையெல்லாம் அரை நூற்றாண்டின் முன்னரே கா.சு. கருதிய கருத்துகள். இவற்றுள் மிகச்சில சட்ட உரிமை பெற்றிருக் கின்றன. ஆனால்பலபழைய நிலைமையிலேயே உள.

'சட்டத்திருத்த வழக்கறிஞர் குழு' வொன்று அமைந்து தமிழர் நலத்தில் ஊன்றிற்றில்லை. தமிழர் சமய சங்கம் தோன்றிக் கிளையமைக்கவும் இல்லை; கிளர்ச்சி செய்யவும்இல்லை. பழைய குழறுபடைகள் அப்படியேநிலைத்திருப்பதற்கே சமயச் சார்பு மன்றங்கள் தோன்றுகின்றன; கடனாற்றுகின்றன.

சமய நம்பிக்கை அல்லது இறையுண்மை யுடையார். மெய்ப் பொருள் காண்பது அறிவு' என்பதை ஏற்பதில்லை. கண்ணை மூடி நம்புதலே' கடப்பாடு என்பது அவர்கள் வைப்பு நிதி! வள்ளலார், "கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்’ என்றாலும், அதனைக் காணவும், கண்மூடிக் கொள்பவர் கண்ணைத் திறப்பது என்றோ?

79

அழுத்தமான சமய நம்பிக்கை, முழுதோன்றிய இறையன்பு, தெளிவான மெய்ப் பொருள் அறிவு இவற்றை ஒருங்கே கொண்ட 'கா.சு' எத்துணைப் பகுத்தறிவுச் செல்வராகத் திகழ்கிறார்! எத்துணைச் சீர்திருத்தச் செம்மலாகத் திகழ்கிறார்!