பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

137

"தாங்கள் பக்தனில் அடிக்கடி எழுதியதன் பயனாக நான் ஆங்கில இலாகாவுக்கு யாதொரு நிபந்தனைகளும் தடையுமின்றி வரலாம் என்று அரசாங்கத்தார் என் சகோதரன் எழுதிய கடிதத்திற்குப் பதில் இறுத்திருக்கிறார். என் நன்றியை எதிர் பார்த்துத் தாங்கள் கிளர்ச்சி செய்யவில்லையாகிலும் என் மனமார்ந்த நன்றியைத் தங்களுக்கு நான் தெரிவியாமலிருத்தல் எங்ஙனம் சாத்தியம்? கட்டுகள் நீங்கிவிட்டமையால் தாங்களும் இதர தலைவர்களும் குறிப்பிடுகிறபடி தேசத் தொண்டைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்.'

தேசபக்தன் தொண்டு இரண்டரை யாண்டே நிகழ்ந்தது! எனினும் என்ன? அதன் ஆற்றலும் ஆக்கமும் பெரிது! காண்க;

(C

யான் உருத்திரனானேன்; என் எழுதுகோல் பாசுபத மாயிற்று. எனக்குத் துணைபுரிந்த கணத்தவர்கள் எப்படியானார்கள்? அவர்கள் வேலாயுதர்களாகவும் கோதண்ட பாணிகளாகவும், காண்டீபர்களாகவும் ஆனார்கள்""

'என் மேசை மீது திலகர் பெருமான் திருமுக உருவம் பொலியும். அஃது என் கருத்தில் நின்று ருத்திரகலை எழுப்பும்; எழுது கோலைப் பாசுபதமாக்கும்.0"

"தேசபக்தன் நிலையம் காளிகட்டமாயிற்று. அங்கே காளி வீரநடம் புரிந்த வண்ணமிருப்பாள். அந்நடனம் உமிழும் சுவாலை எரிமலை போன்றிருக்கும்”.!"

"தேசபக்தன் அம்பறாத் தூணியினின்றும் வழக்கம் போலப் புறப்பட்டது பாணம்”!2

12

"பெற்ற தம் பிள்ளைக் குணங்களை யெல்லாம் பெற்றவர் அறிவரே யல்லால் மற்றவர் அறியார்

என்னும் 'பிள்ளைச் சிறு விண்ணப்பத்தைப்' பேசுதலன்றிப் பிறிதென் பேசுவது?

தமிழ்மொழிபற்றித் தேசபக்தன் 12.3.1918 இல் வெளியிட்ட செய்தி, அதன் தமிழ்த்தொண்டை விளக்குவதாக அமைகின்றது. பல்பல தமிழாக்கக் கருத்துகள் பிறபிற தலைப்புகளில் வெளிப் பட்டிருப்பினும் ஒரு சான்றாக இதனைக் கருதலாம்.