பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

நவசக்தியில் பொதுவுடைமைக் கட்டுரைகள் பூத்தன; சன்மார்க்கச் செய்திகள் திகழ்ந்தன; பெரியபுராண ஆய்வுக் குறிப்புரைப் பதிப்பும் வெளிவந்தது!

இரண்டரையாட்டைத் தேசபக்தன் செய்த தொண்டு இவை யென்றால், அதனினும் எண்மடங்கு நாள் நடைபெற்ற நவசக்தி தொண்டு எத்தகு விரிவுடையதாம்! அதன் ஆசிரியக் கட்டுரை களும், சிலம்பொலி என்னும் தலைப்பின்கீழ் வந்த கட்டுரைகளும் தேர்ந்து திரட்டித் தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு என்னும் தலைப்பில் 1935 இல் வெளிப்பட்டது. தமிழ்ச்சோலை எனப் பெயர் சூட்டப்பட்டதேன்?

"பலதிறக்கட்டுரைகளால் ஆக்கப்பெற்ற இந்நூலுக்கு எப்பெயர் சூட்டுவது? என்று எண்ணலானேன். பலதிற மரஞ்செடி கொடி முதலியவற்றைக் கொண்ட சோலை மீது எனது எண்ணஞ் சென்றது. அவ்வெண்ணம் தமிழ்ச் சோலை என்று பரிணமித்தது.

நவசக்தி-ஒன்பது சக்தி; நவசக்தி இதழும் ஒன்பான் வழிகளில் தொண்டு செய்வதாக நேர்ந்தது. அவற்றுள் ஆறாம் வழி:

"தமிழ்மொழியையும், தமிழ்நாட்டுப் பழைய வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றையும் செப்பஞ்செய்தல்" என்பது,

20

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் முப்பொருளும் திரு.வி.க. எழுத்து - பேச்சு- நினைவு ஆகிய முப்பாலும் பொதுளுதல் வெள்ளிடை எனினும் இத் தலைப்புக் கொண்டே வெளிப்பட்டவை மிகக் கருதத்தக்கவை யல்லவோ!

மொழிப்பற்று

66

"தமிழ்மக்கள் எம்மதத்தைத் தழுவினும் தழுவுக. ஆனால் அவர்கள் தங்களைத் தமிழ்மக்கள் என்பதை மட்டும் மறத்த லாகாது. அவர்கள் தங்கள் முன்னோரிடத்தும் மொழியினிடத்தும் நாட்டினிடத்தும் என்றும் பற்றுடையவர் களாய் வாழ்தல் வேண்டும்.2

'நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றி யமையாதது. தமிழ்நாட்டில் திலகர் பெருமான், காந்தியடிகள் போன்ற தேசபக்தர்கள் தோன்றாமைக்குக் காரணம் தமிழர் களிடம் மொழிப்பற்றின்மையேயாகும் 22