பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இதனைக் கூறும் திரு.வி.க. என் வாழ்வில் நிகழ்ந்த முதுற்புரட்சி து ஆகும். தமிழ் நாட்டுக்காங்கரஸ் காரியக்கூட்டமும் தன் கடன்களையெல்லாம் தமிழிலேயே ஆற்றலாயிற்று என்கிறார்! பலதிறத்தொண்டு

இதழ்த் தொண்டினைக் கண்டோம். இதழ்த்தொண்டு அரசியல் தொண்டே அன்றோ! நாட்டு விடுதலைப்பற்றால் அன்றோ இதழாசிரியர் ஆனார் திரு.வி.க. அதற்காகத் தானே ஊரூர்தோறும் நகர்நகர்தோறும் முழக்கமிட்டார்! இவையெல்லாம் அரசியலேயன்றோ!

னித் திரு.வி.க. அல்லும் பகலுமாகவும், ஊண் உறக்க மின்றியும், நோய்நொடி பாராதும் பாடுபட்ட ஒரு தொண்டு தொழிலாளர் தொண்டேயன்றோ! அவர் கூறுமாப்போலப் 'பீமனைப் பிருங்கியாக்கி' வைத்த பேறு அத்தொழிலாளர் தொண்டையே சாருமன்றோ! அஃது அரசியல் அன்றோ!

இன்னொன்றும் கருதலாம். திரு.வி.க.வின் பொழிவு சமயம் சார்ந்ததாயினும் சரி; தொழிலாளர் இயக்கம் சாந்ததாயினும் சரி; விடுதலை வழிப்பட்ட தாயினும் சரி;இலக்கியத் தொடர்பின தாயினும் சரி; அவற்றுள் பெரும் பாலனவும் நூற்றொண்டாக அன்றோ கிளர்ந்தது. தம் பொழிவை வாய்மொழியுரை' என்றும், 'எழுத்துரை' யென்றும் இருபால் படுத்தும் திரு.வி.க.வின் எழுத்துரையெல்லாம் என்ன ஆயின? நூற்றொண்டாயின. ஆகலின் 'எங்கும் தமிழ்த்தொண்டு; எதிலும் தமிழ்த்தொண்டு; என வாழ்ந்த ஒரு பெருமகனார் பணிகளைச் சிக்கறத் தனித் தனியே பிரித்துக் காட்டல் அரிது என்பதைச் சுட்டவே இவ் விளக்கம் என்க. அன்றியும் ஒரு தலைப்புத்தொண்டின் உள்ளுறையாய், வேறொரு தலைப்புத் தொண்டும் இயலும் என்பதும் தெரிவித்தற் கென்க. அரசியல் தொண்டின் அடித்தளத்தை அல்லது உயிர்ப்பைத் திரு.வி.க. தமிழ்த் தென்றல் அணிந்துரையில் குறிப்பார்:

அரசியல்

"மக்கள் வாழ்வு நலனுக்குரிய துறைகள் பல. அவைகளுள் ஒன்று அரசியல். அவ்வொன்றோ உயிரனையது. என்னை? உலகி லுள்ள மற்ற வாழ்வுத் துறைகளின் ஆக்கமும் கேடும் அரசியலைப் பொறுத்து நிற்றலின் என்க”