பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நூற்றொண்டு

எனது நூற்றொண்டுக்குரிய காலம் பெரிதும் இரவாகியது. எனது கை நள்ளிருள் அலகையாயிற்று"

திருக்கை

கை, அலகையாவானேன்! அலகையாவதுபேய்! நள்ளிருளில் அலைந்து திரிவது என்பது நம்பிக்கை! நள்ளிருளில் அசைந் தசைந்து எழுத்தாட்டம் ஆடிய கை அலகை எனப்பட்டதாம்.

ம்

-

ஆனால், எழுத்தாளர் கை அறம்பயில் எழுத்தாளர் கை அலகையோ? திருக்கை என்பதே பண்டை வழக்கு!

'திருக்கை' என்று இருவர்கைகளைப் பழநூல்கள் வழங்கின. ஒன்று உழவர் கை. சான்று; 'திருக்கை வழக்கம்' என்னும் நூல். மற்றொன்று ஏடு எழுதுவார் கை. சான்று; திருப்பதியம் எழுது வார்க்கெனத் திருக்கோயிலில் இடம் பெற்றிருந்த திருக்கைக் கோட்டிக் கல்வெட்டுகள். அத் தெய்வத் திருக்கையோ, 'அலகை? உவமை எதுவும் செய்யும்! பணிவார்ந்த உள்ளத்தில் முனைப்பிலா உள்ளத்தில் - தம்மைப் பற்றி எழும்பும் உவமை எதுவும் சொல்லும்! நூற்றொண்டு:

திரு.வி.க.வின் பொழிவும் நூற்றொண்டே! அரசியலும் நூற்றொண்டே! தொழிலாளர் இயக்கமா, பெண்டிர் விடுதலையா எல்லாமும் நூற்றொண்டே! இன்னும் சொன்னால் அவர் வாழ்வே நூற்றொண்டு ஆதலை வாழ்க்கைக்குறிப்புக் காட்டும்! அவர் கண்ணொளி மங்கியபோதும், படலம் அறவே மறைத்தபோதும், படுக்கையில் கிடந்த போதும், செய்தவையெல்லாம் நூற்றொண்டே! சிலர் வாழ்வு நூலாகும்! சிலர் நூலே வாழ்வாகத் திகழ்வர்! திரு. வி. க நூலே வாழ்வாகத் திகழ்ந்த திருவாளர்.

திரு.வி.க. இயற்றிய நூல்கள் ஒருதுறைப்பட்டனவா? தமிழின் துறைகள் அனைத்தும் தழுவிய நூல்கள் அவை! "கதை நூல்கள்.