பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இருமை யற்ற ஒருமைக் காதலில்

ஒன்றி உமிழ்ந்த அன்பே" (9-10)

என ‘அம்மா! அப்பா வைக்காட்டுதல் ஆழமான செய்தி!

"பிள்ளைப் பேற்றால் உள்ளம் வளரும்

உலகம் வளரும் உணர்வும் வளரும்

இருவரை ஒருவர் ஆக்கிய காதல்

பிள்ளை ஆகும் கள்ளம் காண்க!" (2-5)

-

என்பது பிள்ளைப்பேறு. கள்ளம் ஆயது எப்படி? இரண்டை ஒன்றாக்கிய -ஒன்றைப் பறித்துக்கொண்டது கள்ளம் அன்றோ! இப்பிள்ளை, உடல் உள்ளம் உயிர் எல்லாம் எல்லாம் கவர்ந்து கொண்ட 'கள்ளம்' உடையது அன்றோ! கள்ள ஆட்சி கவின்மலை காட்டும் கண்ணாடி மாட்சி.

முதுமை உளறல் பதினாறு பகுதியாம்! பதினாறும் பதினாறு பேறுகளே!

வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றலும் பதினாறு பகுதிகளே; அகவல் நடைவழியதே!

மரத்தடி மாண்பு பரத்தடி யாகம்' (16}

ம் மரத்தடி, இறையுறையுள் எழுந்த வரலாற்றுச்சுருக்கம். "உள்ளத் துள்ளே உள்ளது காடு

வேட்டை ஆடி ஓட்டுக விலங்கை” (22-23)

என்பது 'வேட்டை'! புறவேட்டை விடுத்து அகவேட்டை யாட் ஏவும் அருமணி.

“போரை ஒழிக்கப் போரில் இறங்கினோம்

குண்டைத் தொலைக்கக் குண்டை எறிந்தோம்

வாளை வீழ்த்த வாளை ஏந்தினோம்

விளைந்த தென்னை” (13-16)

என்பது தவநெறிக்கு ஆட்படுத்தல். அத் தவநெறி 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என ஒருமை நாட்டம் அமைதல்.