பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

187

சின்னண்ணன், தெற்குத் தெருப்பெரியவர், மேலவீட்டார், கீழூரார், கடைக்காரர், பண்ணையார் என்பவைபோல வழங்கப்பட்ட பெயர்களாம்.

தமிழறிஞர்

னி மேலே சுட்டிய எழுவாய் பெயர்களுள், கல்விப் பகுதியில் வரும் 'தமிழறிஞர்' நாம் எடுத்துக்கொண்டுள்ள ஆய்வுப் பொருளுக்கு மிக அணுக்கராக உளர். ஆகலின், அவரைப் பற்றி ஒரு சிறிது காணலாம்.

தமிழறிஞர் என்னும் தலைப்பில் கிருஷ்ணமாச்சாரியார் முதல் அன்புகணபதி ஈறாக நாற்பத்தைவர் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள. அவருள் சிலரைப் பற்றிய ஓரிரு குறிப்புகள்

காண்க:

கதிரைவேலர்:

தம் ஆசிரியர் கதிரைவேலர் 'அகராதிச் செவிலியாக' இருத்தலைக் குறிக்கிறார் திரு.வி.க. "கதிரைவேற்பிள்ளையாற் செப்பஞ்செய்யப்பெற்ற தமிழ்ப் பேரகராதி, பின்னே தோன்றிய பல அகராதிகட்குச் செவிலித்தாயாக நின்று வருதலை அறிஞர் இன்றும் போற்றா நிற்கின்றனர்.”

பாம்பன் அடிகள்:

சுவாமிகள்

வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்.

உ.வே. சாமிநாதர்:

சாமிநாதர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார்; அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வும் தமிழ்; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்.

மறைமலையடிகள்:

அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரனாரும் ஓருருக்கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார்.