பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் -25

நடைஇயற்கையாகும். இன்னொருவர்க்குவேறுவித நடை இயற்கையாகும். இவர் அவரைக் குறை கூறுவது, அவர் இவரைக் குறைகூறுவதும் தவறு. ஒரே வித நடை எல்லாரிடத்திலும் அமைவது அரிது. உலகம் பலவிதம்."

'ஒரே வித விதைகள் ஒரேவித நிலத்தில் விதைக்கப்படு கின்றன. அவை முளைத்து மரங்களாகுங்கால் எல்லாம் ஒரேவித வடிவங்களையா பெறுகின்றன? இல்லையே. மரங்கள் எத்துணையோ வடிவங்களைப் பெறுகின்றன. இஃது இயற்கை அன்னையின் திருவிளையாடல் மொழி நடையும் அவரவர் இயற்கைக்கேற்றவண்ணம் அமையும். இயற்கை அமைவைக் குறித்துப் போராட்டம் எற்றுக்கு?

66

"என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது; மற்றொன்று பத்திரிகையுலகை அடைந்த நாளில் அமைந்தது. இறுதியதே எனக்கு உரியதாய் - உடையதாய் நிலைத்தது. இந்நடை எளியது; சிறுசிறு வாக்கியங் களாலாவது. இந்நடையிலும் நூலுக்கேற்ற காலத்துக் கேற்ற - அமைவுதானே பெறும்!

-

"எனது பேச்சு நடையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். பெரும் பேச்சுக்குரிய குரலையும் நாவையும் இயற்கை அன்னை எனக்கருளியுளார்.பலதொண்டுகட்கு எனது பேச்சே பெருந்துணை செய்து வருகிறது."

திரு.வி.க. வின் நடையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அரிதாக வடமொழிக்கலப்பு வரும்; வடமொழி எழுத்து வருவதும் விலக்கப்படாது. அவ்வாறே அரிதாக ஆங்கிலச் சொற் பெய்வும் நிகழும்; அது மாஜிஸ்ட்ரேட், மானேஜர், லிமிடெட் எனத் தமிழ் வடமொழி எழுத்துப்பெய்வுடன் நிற்கும். 'தேர்தல் (Selection) சோதனை' எனவும் மிகமிக அரிதாய் ஆட்சிபெறும். தனித்தமிழ்

ww

-

"வேதாசலனார் தமிழ் - செந்தமிழ் சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது" என்றும், “அவரது தமிழ் உடலும், தமிழ் உரையும், தமிழ்க் குரலும் தமிழ்ப்பொருளும் என்னை அவர்தம் தோழனாக்கின; தொண்டனாக்கின" என்றும் - கூறும் திரு.வி.க., அவர்தம் தனித்தமிழ்க்கொள்கையைச் சுட்டி