பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

195

திரு.வி.க.ஆட்சிசெய்த சொல்நயம், பொருள்நயம் விறு, உணர்வு, மெய்ப்பாடு இன்னவைபோற்றப் பெறுகின்றனவா? திட்டமிட்டுத் தமிழைக் கெடுக்கும் தாளிகைகள் பெருகிய வண்ணமாகத் தானே உள. முன்பெல்லாம் கூடியவரை நல்ல நடையிலும் கலப்பு இன்றியும் எழுதிய தாள்கள் கூட, முன்பு தாம் பயன்படுத்திய தகவினைக் காற்றிற் பறத்திக் கயமைக் கிடமாகின்றனவே! இது வளர்ச்சியாமோ? வளர்ச்சிக்கு அறிகுறி தானுமாமோ?

திரு.வி.க.வினிடம் கொஞ்சிய தமிழ்நடையை எத்துணை எத்துணைப் பகுப்புகளாகப் பகுத்துக் காண்பது? அவர் நடைநயம் குறித்தே முனைவர் ஆய்வு ஒருவர் செய்யினும் முழுதாய்வாக முடியுமோ?ஓராற்றான் சிலவகை நடைகளைக் காண்போம்:

நடைவகை :

அடுக்குநடை

உன்னுங்கள்! உன்னுங்கள்

எழுமின்! எழுமின்!

அழுத்தநடை

ம.வா.கா.அ. 530.

நின்றேன்! நின்றேன்; நெடுநேரம் நின்றேன்!

இணைச்சொல்நடை

வா.கு.500.

என்தந்தையார் வைத்திருந்த நிலபுலங்களும் ஈட்டிய சிறு

பொருளும் படிப்படியே கரைந்தன. வா.கு. 960.

எனது இளைப்பு களைப்பு எல்லாம் நீங்கும்.

இணைப்பு நடை

வா.கு.800.

கிருஷ்ணாராவ் என்னுள் நிற்பார்; யான் அவருள் நிற்பேன்.

இயற்கைஇயல் விளக்கநடை

வா.கு:57.

இளஞாயிறு தனது செங்கதிரை நீலக்கடலில் பரப்பும் போது அப் பரவையிடை அழகு ஒளிர்கிறது. அஞ்ஞாயிறு தனது இளவெயிலை, பசுங்கடல் பொங்கி யெழுந்தாலென உருண்டு திரண்டு பரந்து ஒளி நுழைவதற்கு இடமின்றிச் செறிந்து மிடைந்து சரிந்து சாய்ந்து நிற்கும் குறிஞ்சிக்காடுகளின் பச்சை மேனியில்