பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

என ஆட்சியில் இருத்தல் நாடறி செய்தி. 'நெய்யில்லா உண்டி பாழ்' என்பது இலக்கியங்கண்ட செய்தி.

குடிநீர் வகைகளுளும் தமிழர் சிறப்புக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பந்தல் ஓரறமாக -ஏன்- பேரறமாகப் போற்றப்பட்டது.

பட்டினத்தடிகளார் கழுமலமும் மணிக் கோவையில் சுட்டும் நுகர்வுப் பொருள்களைத் தம் உரைநடையில் தருகிறார் தமிழ்க்

கா.சு.

"பாதிரிப்பூவும், புன்னைமலரும், தாமரையிதழும், வெளிய பச்சைக் கற்பூரமும், கத்தூரிக்குழம்பும், பிற மணப் பொருளுங் கலந்து உண்ணும் நீரமைத்த தண்ணீர்ப்பந்தரும், நறுநெய் கலந்த பொரிக்கறியும், தாளித நறும்புகை கமழும் கறிவகைகளும், வெண்ணிலவு போன்ற தயிரும், பலாப்பழமும், கற்கண்டும், நல்ல சுவைப்பதம் கெடாத முல்லையரும்பு போன்ற அன்னமும், தவத்தினர் யார்க்கும் வறியர் யார்க்கும் கருணையுடன் வழங்கும் அன்ன சத்திரம்” என்பது அது.

'பழ ஆகாரம்' என இடைக்காலத்தில் இருபிறப்பியாக வழங்கப்பட்டது. அதன் பொருளறிவாராவாய்ப் பலகாரமாகப் பெருகிவிட்டதாம். 'குழவுணவும் கிழவுணவும் பழவுணவே! முத்தமிழ்ச் சுவைகண்ட மாந்தர் முப்பழச் சுவையும் கண்டனர். பிறபிற கனிகளையும் கண்டு தேர்ந்து பயன்படுத்தினர்.

ஆகாத்தோம்பலும் ஆப்பயன் கொள்ளலும் கோவலர் வாழ்க்கையது! அதனைப்பேணல் பேரறமாகக் கருதப்பட்டது. 'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இழிவந்ததில்" என்னும் குறளும். வெட்சிப் போர் என்பது ஆனிரை கவர்ந்து வந்து காத்தல் என்னும் புறத்திணை நெறியும், ஆகாத்தலின் அருமையைப் புலப்படுத்துவன.

உடை

இயற்கையொடு இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழர் வாழ்வில், காதல் தலைவன் தன் தலைவிக்கு வழங்கும் பொருள் களுள் தழையுடை என்பதும் ஒன்றாம். பூவூம் தழையும் கொண்டு புனைகலைத் திறமெல்லாம் வட்டிச் செய்யப்பட்ட உடையே தழையுடையாம்! பூவும் தழையும் பறிக்கும்போதும். புனைந்து புனைந்து எழில் கூட்டும் போதும். அதனை வாடிவதங்கா நிலையில்