பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

மங்கை : இந் நகரில் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மொன்று இருப்பதும் தமிழ்நூல்களும் சமய நூல்களும் மிகவும் அழகாக வெளிப்படுத்தி வருவதும் தெரியாதா?

புனிதா : ஓகோ! நினைவு வந்தது, பள்ளி மாணவர்க்கெனக் காலணா வெளியீடுகள் பல வெளியிட்டு வருவது அக்கழகத்தார் தாமே?

மங்கை : நன்று சொன்னாய்; அவர்கள் இதுவரை மெய்கண்ட சாத்திரங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினர். வாங்கி னவர்கள் படித்துத் தெளியக் கருதினர். எல்லாருக்கும் அச் சாத்திரப் பொருள்களை விளக்கி மகிழ்விக்க இம் மாநாட்டைக் கூட்டியுள்ளார்கள்.

புனிதா : மிகவும் நன்று. மாநாட்டு நிகழ்ச்சி முறைகளைக் கவனித்து யாவரும் இன்புறுவோமாக.

மாநாட்டின் முதல் நாள், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானபோதம் என்பனவும், இரண்டாம் நாள், சிவஞானசித்தியார் பரபக்கம், சிவஞானசித்தியார் சுபக்கம், இருபா இருபஃது என்பனவும், மூன்றாம் நாள், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் என்பனவும், நான்காம் நாள் திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, உண்மை நெறி விளக்கம் என்பனவும், ஐந்தாம் நாள், கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, சங்கற்ப நிராகரணம் என்பனவும் ஆராயப்பெற்றன.

நான்காம் நாள் விழாவினிடையே தமிழ்ப்புலவர் மாநாடும் ஊர்வலமும் நிகழ்ந்தன.

ஆறாம் நாள் விழா சைவ மாதர் மாநாடாக நிகழ்ந்தது.

ஏழு நாள்களும் இசையும் நாடகமும் உரையாடலும் என்னும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன, ஏழாம் நாள் இரவு முற்றாக இசை நிகழ்ச்சியே நடாத்தப் பெற்றது. இந்த ஏழு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட புலவர் பெருமக்கள், கலைச் செல்வர்கள் சரியாக ஐம்பதின்மர் ஆவர்.

ஏழு நாள்களாக இடையீடு இன்றி இராப்பகலாகத் திருவரங்கர் உழைத்தார்; தம்பியரும் உடன் உழைத்தார்; சீரமைந்த தொண்டர் குழுவொன்றும் பணி செய்தது; ஊரவர் ஆர்வம் கட்டுக் கடங்காது நின்றது! கூட்டம் விழாக் கோலம் கொண்டது! ஊர்வலத்தின் சிறப்பு உள்ளங் கவர் காட்சியாக