பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

து

103

யொழுக்கும் நேர்ந்தது எனின், தாங்கிக்கொள்ள ஒண்ணுமோ? ஆருயிர்த் துணையின் அவலநிலை அரங்கரை வாளா விடுமோ? அதனால் அரங்கரின் உடல் நலமும், உளநலமும் மேலும் கேடுற்று வந்தன!

சைவ நெறியில் அசையாத பற்றாளர், தனித் தமிழில் பேரீடுபாட்டாளர், சங்க இலக்கியத்தில் பெருந்தோய்வாளர், பன்னூல்களுக்கு உரைகண்ட ஏந்தல், வாய்மை, தூய்மை, நடுவுநிலை இன்னபலவும் இலங்கிய குணமலை, அரங்கர்க்குப் பேரன்பர் நாவலர் ந. மு. வேங்கடசாமிநாட்டார். அவர்க்கு அறுபான் ஆண்டு விழா ஏற்பாடு அன்பர்களால் தொடங்கப் பெற்றது. அதனை அறிந்த அரங்கர் தம் கடனாற்றுதற்கு முந்து நின்றார்; முனைந்து நின்றார்.

விழா ஏற்பாடுகளை நாவலர் தூண்டுதலும் வேண்டுதலும் இன்றித் தாமே மேற்கொண்டு தம் மேற்கோளை அவர்க்கு எழுதி விடுத்தார்; இசைவும் பெற்றார். நாடறிந்த நல்ல தமிழர் பெருமானுக்கு நயக்கத் தக்க நல்விழா எடுக்குங்கால் நாட்டவர் எடுக்க வேண்டிய நன்முயற்சிகளைத் திட்டப்படுத்தி விளம்பரம் செய்தார். ஆனால் விழைவு என்ன ஆயிற்று? விழைவு வேறாக விளைவு ஆயிற்று!

மணிவிழாக் காணவேண்டிய மாத்தமிழ்ப் புலவரேறு 26-3-44 ஆம் நாள் கழகத்திற்கு விடுத்த கடிதத்தில், “19-3-44 ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய தமிழ் மருந்துண்பதனால் உடல் நலம் பெற்று வருகிறது. வைகாசி மாதம் 12 இல் சனி இடபத்தி னின்று பெயரும் பொழுது முழுநலனும் உண்டாகிவிடும். பின்பு பல தமிழ்ப் பணிகள் செய்ய இறைவனருள் துணைபுரியும்” என்று வரைந்த செய்தி வழிமாறிப் போயிற்று! 28-3-44 காலை ஒன்பதுக்கு அத் தமிழ்ப் பேரொளி ஒடுங்கிவிட்டது! மணிவிழாக் கோளில் மகிழ்ந்திருந்த அரங்கர்க்கு இச் செய்தி ஆறாத் துயராயிற்று! புண்மேற்பட்ட புண்ணாயிற்று!

மானார்.

நீலாம்பிகையாரையுற்ற நோய் சொல்லொணாத் துயரூட் டிற்று. படுத்த படுக்கையானார்; பருவரலுக்கு L அரங்கர் என்செய்வார்? 21-4-44இல் அவரைத் தோனாவூர் மருத்துவச் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் வயிற்றில், அறுவை மருத்துவம் செய்யப்பெற்றது! அறுவைக்குப் பின் 27-4-