பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

117

இளைப்பினால் மூச்சுவிட முடியாமல் தவித்துத் துடித்துத் துடித்து விழுந்தது. உடனே மருத்துவரை வருவித்து மருந்து கொடுத்து எல்லாம்வல்ல ஆண்டவன் அருளால் இன்று நலம்.

பிச்சாளுக்கும் கழுத்தில் ஒரு பெரிய கட்டி. உடையாமை யால் மருத்துவரைக் கொண்டு அதனை அறுத்து நலப்படுத் தினோம். ஆண்டவனருளால் அவள் இப்போது நலம். இவ்வாறு குடும்பத்தில் அடுத்தடுத்து நோயுந் துன்பமும் மிகுதியாகத் தான் இருக்கின்றன. அவனருள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தல் ஒன்றே நாம் செயற்பாலது. 20-4-45.

66

..படுத்துகிற பாட்டுக்கு ஓர் அளவே யில்லை. என் சய்வேன். புண்பட்ட என்உள்ளம் மேலும் மேலும் புண்படு கின்றது......அடக்க எங்களால் முடியவில்லை. இவன் துன்பம் பொறுக்கமுடியாமல் என் உடல்நலமுங் கெடும் என்பதில் ஐயமில்லை. இன்னும் நான்கு நாள்கள் நல்லனவாயில்லையாம். ஆகலான் அவனை வியாழக்கிழமையன்று பகல் ஒன்றரைமணி வண்டிக்குத் தெரிந்தவர் எவருடனேனும் அனுப்பித் தங்கட்குத் தந்தி கொடுக்கின்றேன். என் ஆருயிர்க் கணவனாரை இழந்த தீவினையாட்டியாகிய யான் மகனால் மன ஆறுதல் பெற ல்வினை செய்தேன் இல்லை. எல்லாம் வல்ல சிவபிரான் அருள்கொண்டும் என் உடன் பிறப்பனைய தங்கள் துணை கொண்டுமே பிள்ளைகளுடன் சிறிது ம மன ஆறுதலுடன் இருக்கிறேன்.” 20-5-45.

ம்

மெய்ம்மையேயாயினும்,

.

இவையெல்லாம் பெற்ற மனத்திலிருந்து பிறந்த எத்தகைய வருந்தத்தக்க உரைகள்! ‘தம்பொருள் என்பதம் மக்கள்' என்பது அம் மக்கள் எண்ணிக்கையும் கட்டாயம் ஒரு கட்டுக்குள் இருக்கவேண்டுவது இன்றியமை யாததே. எத்துணை வளமை பொழியினும் ஒத்த அளவில் பல மக்களைப் பேணுதற்கு ஒருவரால் இயலுமோ? அதிலும் கணவரைப் பிரிந்து கைம்மை நோன்பு கொண்டு கடுநோய்க்கும் ஆட்பட்ட ஒருவரால், சின்னஞ் சிறு சிட்டுகள் போன்ற குழவிகள் பலரை உரிய அளவில் பேணிக் காக்கவும் இயலுமோ? மக்கள்மேல் பேரன்பு இருத்தலில் குறைவில்லை எனினும், அம் மக்களின் எண்ணிக்கையிலும் பேரன்பு வைப்பது தக்கதாகாது என்றும், மக்கள்மேல் பெரும்பற்றுதல் உடையார்க்கும், மக்கள் பலர் உளராயின் மனவெறுப்புக் கொள்ளுதற்கும் வழிசெய்து விடும் என்றும், அம்பிகையார் வாழ்வால் நன்கு அறியலாம். அவர்தம் பெருந்துயர்களில் பிள்ளைகளால் பட்ட துயரம் பெரிதே என்பது வெள்ளிடையாம்.