பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

ஒரு பெருநிலை வணிக நிறுவனத்தில் பணி புரியும் ளையராம்-புதியராம்-நாடு கடந்தவராம்-ஒரு கணக்கருக்கு அப்படியென்ன பெருஞ் செல்வாக்கு? பெரும் பெருஞ் செல்வரும், வணிக வளவரும், தொழில் தோன்றலரும், அறிவுறு பெரியரும், ஆர்வ இளையரும், துடிப்புள்ள தொண்டரும் கேளும் கிளையுமாய் ஒட்டும் உரிமையுமாய்ச் சொல்லியது சொல்லியது நிகழ, வேண்டியது வேண்டியவாறு கிட்ட வாய்த்தது?

அடிகளாரைக் கொழும்புக்கு ஒருகாலைக்கு இருகாலை அழைக்கும் ஆர்வமும், பெரும் பொருள் வழங்கும் திறமும் எப்படி வாய்த்தது? அதற்கு முன்னரே பொதுப்பணியில் அழுந்தி நின்று பலப்பல செய்து, பலப்பலரும் அறியும் பேறு அரங்கர்க்கு இருந்ததில்லையே! அடிகளார்க்காகவோ பொதுப்பணியில் அடிகளார்க்கு உதவுவதற்காகவோ திருசங்கர் கம்பெனி'யைத் தொடங்க வேண்டும்? அடிகளார்க் காகவோ செந்தமிழ்க்களஞ்சிய இதழ்ப்பொறுப்பை ஏற்க வேண்டும்? அடிகளார் ஆர்வத் தூண்டலுக்கு ஆட்பட்டோ சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவ வேண்டும்?

இறங்க வேண்டும்?

திரு. தி. செ. விசுவநாத பிள்ளையே கழகத்தைத் தொடங்கி யிருக்கலாம். அவர்க்கு அன்பராம் மா. திரவியம் பிள்ளையோடு இணைந்தே தொடங்கியிருக்கலாம். இல்லையேல், அவர்கள் மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியராய் அமைந்த தவத்திரு. அடிகளாரை இணைத்துக்கொண்டே நடத்தியிருக்கலாம். அடிகளாரும் தம்மை வந்து கலந்த திரவியனாரிடம் திருவரங்கரை விடுத்துத், தம்மைச் சார்ந்திருந்த ஒருவரைக் கைகாட்டி இணைத் திருக்கலாம்! இல்லையேல் தம்மையோ, தம் மக்களையோ இணைத்துக் கொண்டும் இருக்கலாம்! அரங்கர்மேல் அடிகள் ஆர்வத் துள்ளல் பாய்ந்தது ஏன்?

நெல்லையார் தொடங்கிய கழகம், தொடக்கத்தை அடுத்தே சென்னையில் கிளையை நிறுவும் நிலைமை எளிதோ? நிறுவிய நாளில் பங்குகள் அனைத்தும் சேர்ந்துவிட்டனவோ? பங்காளிகளுள் எவரேனுமோ, ஆட்சிப் பொறுப்பாளருள் எவரேனுமோ சென்னையில் இருந்தனரோ? இல்லையோ! திருவரங்கருக்கேனும் சென்னையில் ஒட்டும் உறவும், கடையும், இ டமும், வீடும் வாய்ப்பும் இருந்தனவோ? அதுவும் இல்லையே!

அறிவுத் தொடர்பு உடையார் எல்லாரும் குடும்பத் தாடர்பினர் ஆகிவிடுவரோ? உதவியாய் இருந்தவர்கள்