பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

று

L

131

நாசியில் வந்து முடிவது ஒரு சுவாச ஓட்டமாகும். இங்கே சொல்லியவாறு மாறுபடாமல் ஏழு தரம் சுவாசிக்க வேண்டும். இவ்வப்பியாசத்தை உறக்கம் நீங்கி எழுந்தவுடனும், நீராடிய பின்னும், அந்தி நேரத்திலும், வெறு வயிற்றில் முறை தவறாமற் செய்து வருக. இவ்வப்பியாசத்தால் இரத்தம் சுத்தப்பட்டு உடம்பிலுள்ள அகக்கருவிகள் வலுப்படுவதுடன் மனமும் தலைவிரிகோலமாய்ப் பலவாறு ஓடும் ஓட்டத்தினின்று மடங்கி அடங்கும். கோபமாவது வேறு மனவருத்தமாவது கவலையாவது உண்டாகும் போதெல்லாம் மேற்சொல்லியவாறு ஏழு தரம் சுவாசித்தால் அவையெல்லாம் நீங்கிச் சிந்தை களங்கம் அற்று அமைதியாய் நிற்கும். இக் கடிதத்தைப் பந்தோபஸ்தாய் வைத்திருந்து அதன்படி நீயுந் தம்பி அய்யம்பிள்ளையையும் இவ்வப்பியாசத்தைப் பழகி வரும்படி சொல்லிக்கொள்வதுடன் காண்பித்துக் கொள்ளவும். உன் சுகத்தைக் கோரித் திருவருளை வழுத்துகின்ற

க்

வ. திருவரங்கம்பிள்ளை,

பெருமாள் வடக்குத் தேர்த் தெரு,

பாளையங்கோட்டை.

அன்புள்ள,

(ஓம்.) வ. திருவரங்கம்.

நாள். 19-10-1941

அருமையிற் சிறந்த அன்னை திருவடிக்குப் பணிவுடன் வணக்கஞ் செய்து எழுதுவன.

உன் அருமைக் கடிதம் வந்து நீலா படித்துப் பார்த்து வருந்தினாள். நீ ஏன் வருந்துகின்றாய்? நீ உன் உயிருள்ள போதே எல்லாப் பேறுகளையும் கண்ணாற் பார்த்து மகிழ்ந்தாச்சுது. பேரன் பேத்திமார், மக்கள், மருமக்கள் எல்லாரும் பெரும்பாலும் நல்லவர்களாகவே அமைந்திருப்பதும் உனக்கு என்றும் மகிழ் வி னைத் தரக்கூடியதே. மகளை நினைத்தற்கு அறிகுறியாகப் பேரன் எங்களுடனேயேயிருந்து வருவதும் உனக்கு மகிழ்வினையே தந்துவரும். பொருளில்லாமற் கஷ்டப்படுகிறோமோ, படுவோமோ என்ற கவலையும் உனக்கு இருக்க இடமில்லாம் ஆண்டவனே எங்களுக்குத் துணைபுரிந்து வருவதும் உனக்கு மகிழ்ச்சியையே தரும். உன் கண் நலமாக வேண்டி நீலாளும் நானும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘கண் பெற்ற' தேவாரத்தை இன்றுமுதல் ஓதிவரத்