பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தோனாவூர் போய்வருவேன் என்றென்பாற் சொல்லியநீ வானாடு சென்ற வகையறியேன் - மேனோக்கம் வாய்ந்த திருவரங்க வள்ளலே மற்றினிமேல்

6

ஆய்ந்ததமிழ்க் கியாரே அரண்.

-

வித்துவான் ந.சேதுரகுநாதன்.

திருவரங்கம் என்றவுடன் சிவனுறையும் தளியென்று சிலர்சொல் வார்கள் பெருவரங்கிற் பேசிடுவோர் பெரிதுநினை யறிந்தோர்கள் பேச்சொன் றின்றி ஒருவரங்கத் தும்அகலா உண்மைசெறி இறையுறையும் உருவே இந்தத்

திருவரங்கம் என்றுரைப்பார் தெளிவுடையாய் சிவனடியைச் சேர்ந்தாய் என்னே.

மனைவியையும் மக்களையும் மாண்புறுநின் அன்னையையும் மதிவல் லோனாய் உனைநிகரும் இளவலையும் ஒதுக்கியெந்த உலகதனை உற்றாய் அந்தோ தனைநிகரும் தமிழினையும் தகவுநிறை

கழகத்தின் சார்பைத் தானும்

உனையன்றிப் பிறரொருவர் உயர்வடையச் செய்தனரோ உரைப்பாய் அன்பா.

மறைமலையின் மருமகனாய் மாண்புறுநல் மணிவிளக்காய் மதிவல் லோனாய் இறையடியிற் பேரன்பாய் எளியவர்பால்

தண்ணளியாய் ஏங்கி நின்று

குறையிரப்பார்க் குறுதுணையாக் கூடிநிகழ்

பலகுணஞ்சேர் குணக்குன் றேநின் நிறைபிறைநேர் நெடுநட்பை நினைந்துநினைந் தென்னெஞ்சம் நிலைநில் லாவே.

சைவநூல் ஒவ்வொன்றும் தக்கஅரும்

பொருளுடனே தமிழ்த்தாய் நன்மை

கைவந்திவ் வுலகிலுள்ளார் கற்பதற்கே எளிதாகக் கருதிச் செய்தாய்