பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

153

நீலாம்பிகை அம்மையார் அவர்கள் நல்ல பண்பாட்டில் பிறந்து வளர்ந்து தமிழுக்கு அரிய தொண்டு செய்தவர்கள். திருநெல்வேலிக்கு ஓர் அணிகலமாய் இருந்தார்கள். இப்போது மறைந்து விட்டார்கள். குழந்தைகளுக்கும் தங்களுக்கும் தந்தை யாருக்கும் நேர்ந்த துயரத்துக்கு மாற்றுத்தான் உண்டா?

-

டி.கே.சிதம்பரநாத முதலியார், திருக்குற்றாலம்.

ல்லறம் மாண்புக்கும் மொழித் தொண்டிற்கும் அவர் காட்டிய வழியை நமது தமிழ்நாட்டுப் பெண்மணிகள் பின்பற்றினார் நமது நாடு வருங்காலத்தில் சிறப்புற்று ஓங்கி உயரும்.

டாக்டர் டி.எஸ்.திருமூர்த்தி, நுங்கம்பாக்கம்.

அம்மையார் பிரிவால் பெண்கள் உலகு தன் தோள் வலியை

இழந்தது.

தனித்தமிழ்க்

கொண்டலின்

ச.சிவகாமி அம்மாள்,

தூத்துக்குடி

நல்மரபாய் விளங்கிய

அம்மையாரின் பிரிவு தமிழன்பர்களைத் திடுக்கிடச் செய்து விட்டது. ஓர் ஒப்பற்ற தமிழ்மணியை-உயரிய சைவமணியை-ஒரு நற் பெண்மணியை இழக்க நேர்ந்ததைப் பற்றிக் கவல்கின்றேன்.

பி.டி.எஸ்.குமாரசாமி செட்டியார்,

கும்பகோணம்.

இனித் தனித் தமிழில் நூலெழும் ஆற்றலுடையார் யார்?

இது தமிழன்னையின் தவக்குறையே.

-

டி.என்.ஆறுமுகம் பிள்ளை, தமிழகம், கோவை.

அண்ணாரை இழந்து துன்புறுந் தாங்கள் அருந்தமிழ் அண்ணியாரை இழத்தல் கொடுமை! கொடுமை! சொல்லாழம்