பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

துன்பத்தின் ஆழத்தைச் சொல்லுந்திறத்த தன்று! உடலைப் பிரிந்த ஆவி அமைதியுறுக.

வித்துவான் மு.இராசாக்கண்ணனார் பி. ஓ. எல்.,

வாழ்க்கைத்

துணைநலத்துக்கு

குடந்தை.

அவ்வம்மை

ஓர் எடுத்துக்காட்டு. நம் தமிழுக்குச் செய்துள்ள பணிகளோ என்றும் மறவாமற் போற்றற்குரியன. தங்கை நீலாம்பிகையால் நம் தமிழ்நாடு மிகப் பெரிய நலன்களையெல்லாம் பெற்றுச் சிறக்கும் என்று எண்ணியிருந்தேன். ஏமாற்றம் உற்றேன்.

மயிலை சிவ. முத்துக் குமாரசாமி முதலியார், சென்னை.

திருவாட்டி தி. நீலாம்பிகை அம்மையார் பிரிவினால் தாங்கள் தங்கள் அண்ணியாரை இழந்தீர்கள்; தமிழன்னை கடமையறிந்து பணி செய்யும் ஓர் அருமை மகளை இழந்தாள்; தமிழர்கள் ஒரு வீரத் தமிழம்மையாரை இழந்தனர்; சமூகம் ஒரு கற்புடை நங்கையை இழந்தது; இலக்கிய உலகம் ஒரு சிறந்த ஆசிரியரை இழந்தது. எனவே தங்கள் இழப்பில் எல்லோருக்கும் பங்குண்டு.

செ. முத்துவீராசாமி, காவேரிப்பாக்கம்.

திரு. நீலாம்பிகை அம்மையார் பிரிவு குடும்பம் கழகம் மொழி அனைத்திற்கும் ஈடுசெய்ய இயலா இழப்பாகும். துன்பம்! துன்பம்!

-

என் மனம் குடும்பத்தை - அருமை மக்களை நினைந்தே பெரிதும் வருந்துகின்றது. செந்தமிழ்த்தேனும் செல்வப் பண்பாடும் ஒருங்கே குழைத்து ஊட்டிய அருமை அன்னையார் பிரிந்த பின் அந்த அன்புருவாம் குழந்தைகளை ஏங்கும் ஏக்கமே என்னைப் பெரிதும் கலக்குகின்றது. இறைவன் துணை.

வித்துவான் மு. வரதராசன் எம். ஓ. எல்,

நம்பவொண்ணாச்

சன்னை.

செய்தியொன்று கேட்டு மனம்

நைகின்றேன். தாயிற் சிறந்த தகவுடைய அம்மையார் மறைந்தனரா?