பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

37

மக்களின் கடிதங்கள் தொகுத்தல் இன்னவாறான தொகுப்புகளில் ளந்தைப் பருவம் தொட்டே பேரார்வம் கொண்டிருந்தார். பொருள் முட்டுப்பாடு முன்னின்று தகைந்த போதும்கூட அரும் பொருள்களை விலை தந்து வாங்கிச் சேர்த்தலில் கருத்தாகவே இருந்தார் அரங்கர்! அவர் பின்னாளில் தொகுப்புக் கலைத் தோன்றலாய்த் திகழ்ந்ததற்கும், தொகுப்புத் துறையில் இணையற்ற தோன்றலாய்த் தம் திருத்தம்பி சுப்பையாவைத் செய்ததற்கும், மூலக்கூறு இலங்கையில் அரங்கர் நாளிலேயே தொடங்கிவிட்டது என்பதை இவண் நினைவு கூர்தல் தகும்.

திகழச் இருந்த