பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

83

'கற்றுத்துறை போய கற்பரசியார் ஆகிய தங்களுக்குக் குழந்தைகள் சின்னஞ்சிறுவராக இருக்கும் இந்நிலையில் கணவனார் பிரிவு நேர்ந்தது; ஆற்றொணாத் துயர் விளைப்ப தொன்றே. நிலையாமையின் இயல்பு இருந்தவாறு இதுவெனக் கொண்டு ஆறுதல் அடையவேண்டும். உள்ள நிலையைத் துயரத்திற்கு உள்ளாக் காமல் மக்களைப் பேணுங்கள்; தமிழ் நூல்களை ஆராய்ந்து புதிய நூல்களை எழுதுங்கள்; இச் செயலே ஆறுதல் எய்துதற்குரிய நெறியாகும்.'

என்பனபோல உரைத்த ஆறுதல் மொழிகள் எல்லாம் அவரளவில் பயன்படாது ஒழிந்தன.

உயிரன்பு கூர்ந்தஅவர், தம் உண்மைக் காதலைக் கைப் பிடிக்கத் தடை நேர்ந்த காலையில் ஒன்பது ஆண்டுகள் காதற்றவம் புரிந்த காரிகையார்; கருதியவாறே கணவனைக் கைப்பிடித்து "நீயாகியர்என் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவேௗ' என ஈருடல் ஓருயிராக ஒன்றி வாழ்ந்தவர். ஆதலால் அவர்தம் உள்ளம் பிரிவைத் தாங்கிக்கொள்ள ஆற்றல் இன்றி ஒழிந்தது. அதற்கு ஏற்ப உடல்நியுைம் தாங்கமாட்டாததாய்த் தளர்ந்தது. உயிர்போன உடலம்போல அல்லாடிக்கொண்டே வதிந்தார்.

10-10-45 இல் அம்மையார் காய்ச்சலால் படுத்தார். ஒரு கிழமையாகியும் அது தணியவில்லை. வெம்மை 104 வரைக்கும் சென்றது. 102 வரைக்குக் குறைந்தபாடு இல்லை. அவர்நோயிற் படுதத்தற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்த்தான் பாளையில் இருந்து சென்னைக்குச் சென்றிருந்தார் திரு.வ.சு. அவர்தம் அன்பு மனைவி மங்கையர்க்கரசியார் தம் அக்கைக்குத் துணையாக அரங்கனார் பிரிவுக்குப் பின் பாளையிலேயே தங்கியிருந்தார். செய்தியறிந்து உடனே பாளைக்குத் திரும்பினார் வ.சு. அறிவும், உலகியல் உணர்வும் அகவையும் நிறைந்த டாக்டர் திரு. சோமசுந்தரம்பிள்ளை உன்னிப்பாக ஆராய்ந்து மருத்துவம் புரிந்தார். எனினும் நோய் தீருமாறு இல்லை.

3-11-45 இல் காய்ச்சலுடன் இருமலும் கலந்துகொண்டது. இருமல் சளியுடன் இரத்தமும் கொட்டியது. பின்னே கை கால்களை அசைத்தல், உணர்வு இழந்து பேசுதல் ஆகியவையும் தொடர்நதன. 4-11-45 அன்று அருமை மைத்துனர் வ.சு. அவர்களை அழைத்தார். "இனி யான் பிழைக்கமாட்டேன்; என் மக்களை அன்புடன் பாதுகாத்தல் வேண்டும்; எனக்கு உயிர்விட விருப்ப