பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

மில்லை; பிள்ளைகளுக்காக வாழவே விரும்புகிறேன்; ஆனால் சிவபிரான் என்னை அழைக்கிறான்" என்றார். "புண்ணியனே உன்னடிக்கே போதுகின்றேன்." என்று திருத்தாண்டகம் இசைத்தார். 5-11-45 திங்கட்கிழமை பகல் 11 மணிக்கு மேல் இறப்புத் துன்பத்திற்கு ஆட்பட்டார். அவர் வாய் அம்மையே அப்பா என்றும் நமசிவாய என்றும் கூறிக்கொண்டிருந்தது. அம்பலக்கூத்தன் படத்தை மார்பிலே வைத்துக்கொண்டு கைகூப்பி வணங்கினார்; திருநீறணி வேண்டித் திருநீறும் அணிந்து கொண்டார். பகல் 1-16 மணிக்கு அவர் ஆருயிர் அம்பலவன் அடிக்கண் அமைந்தது!

இடிமேல் இடி இடித்தால் எவரால்தான் ஆற்ற முடியும்! "பட்ட காலிலே படுமெனும் பழமொழி

பட்ட அரங்கனார் பத்தினி பிள்ளைமைப் பட்ட எண்மரை விட்டிறந் துண்மை கைப் பட்ட போதியான் பட்டதை என் சொல்வேன்" "மக்களொரு பாற்புலம்ப மாமியொரு பால்லற ஒக்கலெலாம் கூடி ஒலிபெருக்க - மிக்கதமிழ் அன்னை இரங்க அலுவலகத் தார்புலம்ப என்னைநீ லாபிரிந்தாய் இங்கு

எனத் தமிழ் நெஞ்சுடையார் ஊற்றுக்கண் திறந்து ஆறாய்ப் பெருக்கிக் கண்ணீர் ஒழுக நின்றனர்.

க்

பொருவரும் அண்ணலார்அண்ணியார் ஆகிய இருவரும் இல்லாக் குடும்பத்திற்குத் தாயும் தந்தையுமாம் கடமையை மேற்கொண்டார் வ.சு. மங்கையர்க்கரசியார் நிலையாகப் பாளையிலேயே தங்கி இளைய மக்களையும் முதிய மாமியாரையும் பேணும் பணி பூண்டார்; இனியார் அவரை அன்றி, ‘இனி யார்' அக் குடும்பத்தைத் தாங்குதற்கு உரியார்?

வீடு தகுதி வாய்ந்த தலைமகனாரை இழந்தது! கழகம் தன்னைத் தோற்றுவித்து வளர்த்து வளமாக்கிய ஆட்சியாளரை அமைச்சரை இழந்தது! இவ் விருவகைப் பொறுக்கலாற்றாச் சுமைகளும் ஒருங்கே ஒரேவேளையில் கழக முகவர்மேல் வீழ்ந்தது; கழக முகவர் கழக அமைச்சர்ஆனார். ஆனால், குடும்பம் பாளையிலேயே இருந்தது. ஏன்? முதிய அன்னையாரைப் பேணுதல் முறையானகடமையாயிற்றே!