பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

85

"பாளையங்கோட்டை என்னும் ஊரில் எங்கள் ஆய்ச்சி இருக்கின்றாள். நாங்கள் அங்கே பேயிருந்தோம். அவள் எங்களுக்குக் காலையில் முகத்தைக் கழுவித் திருநீறு பூசுவாள். இட்டலி அவித்துக் கொடுப்பாள்; தோசை சுட்டுக் கொடுப்பாள்! தயிர் கடைவாள்; தயிர்கடைந்து கொண்டிருக்கும் போது நாங்கள் பக்கத்தில் போவோம். எங்களுக்குக் கையில் வெண்ணெய் தருவாள். அதனை நாங்கள் தின்போம்" என்று தமிழரசி கூறுவதாகக் 'குழந்தைப் பேச்சில்' எழுதுவது இவர் தம் உள்ளார்ந்த உண்மை வெளிப்பாடேயாம். இத்தகையவர் இளங்குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பிலே வளர்ந்தவர். அந்த அன்னையைப் பேணுதலை உயிர்க்கடனாகக் கொண்டார். அதற்காகவே தம் அருமை மனைவி மக்களைப் பாளையிலேயே தங்க வைத்திருந்தார். அதனால் சென்னைக்கும் பாளைக்குமாக அலைந்து அல்லலுற்றார். இப்படி ஓராண்டு ஈராண்டுகளா? எட்டாண்டுகள்; ஆயினும் அப் பணி செய்தலில் ஓர் அமைதி கண்டு மகிழ்ந்தார்.

"தமிழுக்கும் தொண்டு செய்தோர்செத்ததில்லை”

பாவேந்தர்.