பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

வயிர மணியை முத்துக்கு மணம் செய்துதரப் பெற்றவர்களும் பெரியவர்களும் ஒரு நன்முடிவு செய்தனர்.

21-6-59 இல் கழக நிறுவனர் திருவரங்கர் திருமகளார் மங்கையர்க்கரசியார்க்கும் பாம்புக்கோயில் திரு.சே. அணைந்த பெருமாப்பிள்ளை அவர்கள் மகனார் கோமதி நாயகத்திற்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நிகழ்ந்தது. அத் திருமண ஏற்பாடுகளைச் செய்தவர்கள் திரு. வ. சு. அவர்களும் அவர்தம் அருமை மனைவியார் மங்கையர்க்கரசியாருமே என்பது வெளிப்

படை.

இத் திருமணம் நிகழ்ந்தபின் மூன்றாம் நாள் (24-6-59)இல் அதே இடத்தில்திரு. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் வயிரமணியம் மைக்கும் திருமணம் சைவத் தமிழ் முறையில் நிகழ்ந்தது. இத் திருமணங்கள் இரண்டையும் கழகப்புலவர் சித்தாந்த பண்டிதர் ப. இராமநாத பிள்ளையவர்கள் இயற்றினார்.

'ஒப்பனை செய்து வனப்புற அமைக்கப்பெற்ற திருமண அறையின் மீது கிழக்கு நோக்கித் திருமணமக்கள் இருவரும் வீற்றிருப்ப அவர்கட்கு நேர்முகமாய் வடகிழக்கு மூலையில் இருந்து முறையே பிள்ளையார், நிறைநெல் நாழி, நிறைகுடம், திருவிளக்கு ஆகிய நாற்பெரும் பொருளும் நன்குற நாட்டப்பெற்று அவற்றிற்குத் திருமுறை வழிபாடு ஆற்றப்பெற்றது. மணவறையின் நாப்பண் விழைதரு தழலோம்பல் நிகழ்ந்தது. திருமுறைப் பாட்டுகள் பண்ணொடும்ஓதப்பெற்றன. திருப்பூட்டியதும் சுற்றமும் நண்பும் சூழ மணமக்கள் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு மனையறம் புகுந்தனர்".

திரு.வ. சு.வுக்குப் பொழுது எல்லாம்! கடமை! கடமையே அதுவும் புகுந்ததோ விரிந்து செல்லும் பொதுநலப்பெரும் பணி! அப் பணிக்கென்றே தம்மைத்தாமே ஆட்படுத்திக் கொண்ட தவப்பெருந்தொண்டர்! 'பொழுது கிட்டவில்லை' என்பது நாள்வழி நிகழ்ச்சியே அன்றிப் பொழுது போகவில்லையே பொழுதுபோக்கு வேண்டுமே' என்பவை இவர் இளமை முதலே அறியாதவை.

இத்தகையர் மனைவியாக இருக்கும் மங்கையர்க்கு அரசியார் பொறுப்பு - குடும்பப் பொறுப்பு - எவ்வளவு பெரிது! அதிலும் அரங்கனார் குடும்பச்சுமையையும் அமைந்து தாங்கும்