பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு 3

103

தமிழாட்சி ஒருகாலத்தில் நடந்தது. தொடக்கநாள் முதல் ஆங்கிலவர் வரும்வரை நடந்த தமிழாட்சி ஆங்கிலம் புகுந்ததால் அகன்றது. இப்பொழுது ஆங்கிலமோ, ஆங்கிலவர் போயும் கூடப் பேய்விடவில்லை. ஆட்சியில் ஆங்கிலம் இருந்து கொண்டது என்றால், கோயிலை வடமொழி முற்றுகையிட்டு வாடையென வண்டமிழை வெருட்டியடித்தது. அந்நிலை ன்றும் மாறிற்றறில்லை. இசையரங்கோ தெலுங்குக்கு இரையாகிவிட்டது: ஒட்டகத்துக்கு ஒருபக்கமா கோணல்? தமிழுக்கு ஒரு பக்கமா கேடு?

உணர்வுடையார் நெஞ்சத்தெல்லாம் தண்டமிழ், பண்டை நிலையை அடைந்தே ஆக வேண்டும் என்றுனும் ஆர்வம் எழுந்தது. ஆனால் செயலுக்கு எவரே கொணர்ந்தார்? செயலுக்குக் கொண்டு வரமுனைந்தவர்களுள், முன்னேறி வெற்றி கண்டவர் திரு.வ.சு. அவர்களே.

‘அறங்கூறு அவையம்' சிறந்த பணி செய்த மண்ணிலே, ஒரு பெண்மணியே மன்னன் அவை புக்கு 'வழக்குரையாடி' வெற்றி கொண்ட மண்ணிலே, வழக்குரைக்க அந்த மண்ணின் மக்கள் மொழி வகைகெட்டுப் போயிற்றோ? என வ. சு. எண்ணினார். ஏங்கினார். எழுச்சி கூர்ந்தார். உரையாடலைக் கேட்போம்:

“நீண்ட நாள்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேனே, சட்டத்தைப்பற்றிய தமிழ் நூல்கள் எழுதவேண்டும் என்று? எப்பொதும் எழுதப் போகிறீர்கள்? விரைவிலே எழுதிக் கொடுங்கள்."

'சட்ட நூல்களைத் தமிழில் நான் எழுதினால் யார் வாங்கப் போகிறார்கள்? உங்களுக்கு இழப்பல்லவா ஏற்படும்?"

“சட்ட நூல்களைத் தமிழில் நான் வெளியிட விரும்புவது ஊதியத்திற்காக அன்று. ஊதியம் ஒன்றையே குறியாகக் கொண்டு கழகம் இயங்கவில்லை. புதிய துறைகளிலே தமிழ்நூல்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது அவா, கழகத்தின் குறிக்கோள்."

"சரி, அப்படியானால் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக் களைக் கூறும் நூலான ‘சட்ட இயல்' (Jurisprudance) என்பதைத் க் தமிழில் எழுதி அனுப்புகிறேன்.'

6

"இன்னும் ஆறு மாதத்திற்குள் அதை எழுதி அனுப்புங்கள் காலந்தாழ்த்தாமல் எழுதி முடித்துவிட வேண்டுகிறேன்."