பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19. வியத்தகு வெளியீடுகள்

(வள்ளன்மையாளர்க்கு வறுமை, பிறர்க்கு உதவி செய்ய முடியாத ஒரு நிலைமையே. அவ்வாறே அரிய நூல் வெளியீட் டாளர்க்குத் தளர்ச்சி, அடுக்கடுக்காக நூல்களை வெளிக் கொண்டு வரமுடியாத ஒரு நிலைமையே)

"கழக வெளியீடுகள் கண்கவர் வனப்பின, கருத்துச் செறிவு உடையன. கட்டடச் சீர்மை கவிந்தன, பிழையற்றன. கற்கும் ஆர்வத்தைத் தூண்டி ஈர்ப்பன, தனித்தமிழ் நாட்டத்தை ஊட்டுவன. என்றும் நிலைபெறும் ஏற்றம் மிக்கன" என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்.

கழக நூல்கள் மேனாட்டாரும் வியக்கும் வண்ணம் அமைந்தவை எனப் பலப்பல அறிஞரும் பாராட்டுவர். பாராட்டுவது மட்டுமில்லாமல் நடுவண் அரசும், அச்சகக் கழகமும் பல்கால் பதிப்புச் சிறப்புக்கும் கட்டச் சீர்மைக்குமாகப் பரிசும் பாராட்டும் வழங்கியுள்ளன.

கழக நூல்கள் தமிழர் பழஞ்செல்வப் பேழை எனத்தக்கவை. இடைக்காலக் கருவூலங்களாக இயல்பவை. நிகழ்கால வளங்கள் அனைத்தும் நேரில் குவித்து வைக்கப்பெற்றுள்ள மணிமலைகள்; முத்துக்குவியல்கள் போன்றவை.

"அறிவுச் செல்வங்கள் எல்லாம் இக் கழகத்தில் ஒரு சேரக் குன்றெனக் குவிந்து கிடக்கின்றன. இக் குன்றம் மண்ணாலும் கல்லாலும் இயன்ற வறுங்குன்றம் அன்று. இது நங்குலம்தரும் வான் பொருட் குன்றம். இவை படைப்புக் காலந்தொட்டு வழி வழியாக மேம்பட்டு வருகின்ற நம் தமிழ்ச் சான்றோர் அறிவால் இயன்ற குணப் பெருங் குன்றம்” - இது கழக நூல்களுக்கு ஒருவர் தரும் பரிசு.

குணப்பெருங் குன்றமாய நூல்களைக் குவிக்க வேண்டு மென்றால், குவிப்போர் குணப் பெருங்குன்றமாகவே இருத்தல்