பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12.

13.

16.

20.

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

129

வழக்கிழந்து அம் மாநிலங்களிலே வழக்கிலிருக்கும் தமிழ்ச் சொற்களைத் திரட்டி வெளியிடுதல்.

தமிழ் வேர்ச்சொல் அகரவரிசை வெளியிடுவதற்கு அறிஞர் குழுவொன்று அமைத்தல்.

தமிழக அரசு அலுவலகங்கள், தொழிலகங்கள் எல்லா வற்றிலும் உள்ள அறிக்கைப் பலகைகள் எல்லா வற்றையும் திருத்தமாகத் தமிழில் எழுதச் செய்தல். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உயர்மட்ட அரசு அலுவலகங்கட்குச் சென்று அங்கங்கே ஆட்சியில் தமிழ் செவ்வனே கையாளப்படுகின்றதா என்பதை மேற்பார்வையிட்டுச் செயல்படுத்துதற்கு ஏற்ப அவருடைய தகுதியைக் கூட்டுச் செயலர் (Additional Secretary) நிலைக்கு உயர்த்துதல்.

தமிழில் செய்தி இதழ்கள் நடத்துவோர் அவற்றிற்கு ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் தமிழ்ப்புலவர் களையும் தமிழ்ப் பேராசிரியரிகளையுமே அமர்த்தச் செய்தல்.

24-11-1969 இல் இத் திட்டங்கள் தரப்பட்டன. ஆயப்பெற்றன. ஆனால் நிலைமை என்னவோ அப்படியேதான் இருக்கிறது. 'தமிழ் வளர்ச்சித்துறை' ஓர் இயக்குநர் பொறுப்பிலே இயங்கிக் கொண்டுதான் வருகிறது. தமிழர் நலங் குறித்த அரசு என்றும், "தமிழே எங்கள் பேச்சும் மூச்சும்" என்றும், “எல்லாம் தமிழ் எங்கும் தமிழ்" என்றும் மேடை முழக்கமும் பறை சாற்றலும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. உருப்படியான செயலாக்கம்..? வாக்குகளைச் சேர்த்துத் தருதற்கு வாய்ப்பறையை அன்றி வளர்ச்சிப் பணியில் ஒன்றுவதாகவில்லை. தமிழ்மக்கள் விழிப்புணர்ச்சியும் அப்படி இருக்கிறது! இத்தகைய மக்களுக்கும் அரசுக்கும் இடையேதான் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று நாளெல்லாம் தொண்டு செய்தவரும் நற்றமிழ்த் தொண்டர் வ.சு. தமிழ்மக்கள் தவப்பேற்றால் வாய்த்துளார். அவர் தொண்டு வாழ்வதாக.

1937 இல் பாளையங்கோட்டையில் ‘பலிவிலக்குச் சங்கம்' என ஒரு சங்கம் தோன்றியது. இச் சங்கத்தின் பெயரே அதன் நோக்கத்தை வெளிப்படுத்த வல்லதாம். குழந்தைக்குச் சோறு தருதலைக் 'குழவிபலி' (சிறுபஞ் - 79) என்பர். அதனைப்