பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

காஞ்சிபுரம் அருட்டிரு ஞானப்பிரகாச அடிகளார் எங்ஙனம் தமிழ் அருச்சனையை எதிர்த்து ஆணைப்பத்திரம் கொடுத்தார்கள் என்பதுதான் வியப்பையும் வருத்தத்தையும் தருகிறது. அடிகளார் தவத்தந்தையார் காமக்கூர் சுந்தர முதலியார் அவர்கள் தமிழ்ப் பெரும் புலவர் ஆவர். அவர்களிடம் முறையாகப் பாடம் கேட்டுப் புலவரானவர்கள் பலருண்டு. அடிகளார் துறவுநிலை மேற்கொள்வதற்கு முன் புலவர்முத்துசு. மாணிக்கவாசக முதலியார் என்னும் பெயரைத் தாங்கியவராய்ப் பல ஆண்டுகள் பள்ளித் தமிழாசிரியராகவும் புலவர் கல்லூரிப் பேராசிரிய ராகவும் முதல்வராகவும் தொண்டாற்றியுள்ளார். துறவுபூண்டு ஞானப்பிரகாசர் திருமடத்துத் தலைவரானபின் அவர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர்கள் சென்னை மறைமலை யடிகள் நூல் நிலையத்திலே சிலநாள்கள் தங்கியுள்ளனர். கழக விழாவிலே தலைமை தாங்கிப் பேசியுள்ளனர். தனித்தமிழிலே மிக்க ஆரவமுள்ளவர்கள். அதனால் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரிடம் மிக்க அன்பும் வைத்திருந்தார்கள்.

"1954 முதல் கழகம் வெளியிட்ட மலர் வழிபாட்டு நூல் களைப் பற்றி என்னிடம் பாராட்டிப் பேசியுள்ளார்கள். கழகம் வெளியிட்டுள்ள பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் அடங்கிய பேழையினைப் பாராட்டித் தமது மடத்துக்கு ஒருபேழை வாங்கியுள்ளனர். இவர்கள் எப்படித் தமிழ் அருச்சனையை எதிர்த்து ஆணைப்பத்திரம் கொடுத்தார்கள் என்பது விளங்க வில்லை.

'இவர்கள் காஞ்சியிலுள்ள சங்கராச்சாரிய சுவாமிகள் திருமடத்திற்கு அழைக்கப்பெற்றே தமிழ் அருச்சனைக்கு மாறான கருத்துக்களை எழுதச் செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தமக்கு மாறுபட்ட கருத்துடைய எவரையும்தம் பக்கம் இழுக்கக் கூடிய சக்தி ஆச்சாரிய சுவாமிகளிடம் இருக்கும் போலும்!

'அடிகளார் தமது ஆணைப்பத்திரத்தில் 'அருச்சனை முடிவில் அந்தந்தக் கோயிலில் உள்ள சுவாமிகளின் திருநாமத்தை 'ஸ்ரீஅபிதகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வர ஸ்வாமி நமஹ' என்பது போலத் திருநாமத்தைச் சொல்லி முடிப்பது அறுதிமுடிவு. இதை உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனே போற்றி என்றால் மேற்குறித்த பற்றறும்