பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22. வாரிபெருக்கி வளப்படுத்தல்

(குழந்தை வளர்ந்து குலம் விளக்கும் பெருமையதாகின்றது. அக் குழந்தை பிறந்து, குடியும் குலமும் உலகும் நலம் எய்துதலும் கண்கூடே! குழந்தை வாழ்வினும் ஓர் அமைப்பின் வாழ்வு சீரிதாம்! ஏனெனில் அக் குழந்தை வாழ்வுக்கு எல்லையுண்டு. அமைப்பின் வாழ்வு வழிவழியாகச் சிறந்தோங்கும். வழிவழியாக வரும் நல்லோர் அரவணைப்பெல்லாம் கொள்ளும் பெற்றியது ஒரு நல்ல அமைப்பு)

"பொருள் வரும் வழிகளை மிகுதிப்படுத்தி, அப் பொருள் வளத்தை மேம்படுத்தி நிகழ்ந்துள்ள செயல்களின் இயல்புகளை ஆராய்பவன் வினைகளைச் செய்வானாக என்றார் திருவள்ளுவர். அத்தகைய வினைத்திறம் வாய்ந்தார் விரல் விட்டு எண்ணத்தக்க சுருங்கிய அளவினர். அத்தகையருள் ஒருவர் கழக ஆட்சியாளர் வ.சு. அவர்கள்.

கூட்டுப்பங்கு நிறுவனமாகிய கழகத்தையே கொண்டாடும் குழந்தையாக ஊட்டிவளர்த்துக்,குலதெய்வமாகப் போற்றிப் பொன் கொழிக்கும் வயலாக வளப்படுத்தி அவ் வளத்தால் இனம் மொழி நாடு உய்க்கும் செயல் வளர் செம்மல்வ.சு. அவர்களே!

பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபா விழுக்காடு 5000 பங்குகள் திரட்டுதற்குத் திட்டமிட்டது கழகம். அதன்படி கழக நிறுவனர் அரங்கனார் தாமே தனித்து நின்று 2003 பங்குகள் திரட்டினார். கழகத்தின் மற்றோர் அமைச்சர் மா. திரவியம்பிள்ளை அவர் களுடன் சேர்ந்து 1120 பங்குகள் திரட்டினார். திரவியம் பிள்ளை தாமாக 124 பங்கும், அவர் மகனார் மாணிக்கவாசகம் பிள்ளை 12 பங்கும் திரட்டினார். இப் பங்குகளைத் திரட்டுதற்கே ஆறாண்கஙள செஙனறன. எஞ்சிய 1741 பங்குகளைத் திரட்டுதற்கு 19 ஆண்டுகள் வேண்டியிருந்தன. அவற்றைத்திரட்டி முழுமைப் படுத்தியவர்கள் அரங்கர் அவர்களும். வ.சு. அவர்களுமே.