பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

145

எத்தகைய பொருட் சிக்கலில் கழகத் தொடக்கநிலை இருந்தது என்பதைக் குறித்தற்கே அதன் பங்குத் தொகுப்புகளைக் குறிக்க நேர்ந்ததாம். அத் தொகுப்பில் அரங்கர்க்குள்ள அயரா முயற்சியைக் கோடிட்டுக் காட்டுதற்குமாம். இக் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் அமைப்புநிதித் தீர்மானம் வருமாறு :

“இக் கழகத்தின் மூலதனம் ஒரு நூறாயிர (ரூ 1,00,000) மும்பங்கு 1க்கு ரூ 10 விழுக்காடு பதினாயிரம் (10,000) பங்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. மூல தனத்தை அதிகப்படுத்துவதற்காகப் பங்குகளை அதிகப்படுத்த இக் கழகத்தாருக்கு அதிகாரமுண்டு." இது 14-3-52 இல் கழகம் தன் பங்காளிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் :

இக் கழகத்தின் மூலதனம் ஒரு நூறாயிர (ரூ.1,00,000) மும்பங்கு 1க்கு ரூ 10 விழுக்காடு பதினாயிரம் (10,000) பங்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. மூலதனத்தை அதிகப்படுத்துவதற் காகப் பங்குகளை அதிகப்படுத்த இக் கழகத்தாருக்கு அதிகார முண்டு.

15-2-1963 இல் பங்காளிகள் கூட்டத்தில்

க்

நிறைவேற்றிய தீர்மானம்

இக் கழகத்தின் மூலதனம் இரண்டு நூறாயிர (ரூ.2,00,000) மும் பங்கு 1க்கு ரூ 10 விழுக்காடு இருபதினாயிரம் (20,000) பங்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.மூலதனத்தை அதிகப்படுத்து வதற்காகப் பங்குகளை அதிகப்படுத்த இக்கழகத்தாருக்கு அதிகாரமுண்டு",

இத்தீர்மானங்கள் என்ன சொல்கின்றன? கழகம் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகும்போது அதன் மூலதனம் இருமடங்காகிறது. அதற்குப்பின் 11 ஆண்டுகளில் அது மேலும் இரு மடங்காக அல்லது முதல் தொகைக்கு நான்கு மடங்காக வளர்கிறது என்பதே. இவ் வளர்ச்சி நோக்கொடு பார்க்கும் போதுதான் அதற்கெனப் பாடுபட்ட அயரா உழைப்பாளர் அருமை புலப்படும்

என்க.

இனி, இவ் வளர்ச்சிப் பங்குகள்தாமும் புதிதாகத் திரட்டப் பெற்றவையோ எனின் இல்லை என்பதே வியப்புக்குரிய செய்தி. அமைப்பு விதிகளின்படி பங்காளிகளுக்கு அவர்கள் போட்ட