பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

159

சொற்பொழிவு நூல் வெளியீட்டுப் புதுநெறி குறித்து ஆய்ந்து அரிய கருத்துகளை வழங்குகிறார் :

"புலவர்களின் சொற்பொழிவுகளை உடனடியாகக் கேட்டு விடும் இறந்த காலப் பொருளாகாமல், நிகழரும் எதிரரும் பயன் கொள்ள அச்சுயிர் ஏற்றி நூற்பிறவியாக்கி வாழ்விக்கின்றனர் கழகத்தார். அதனால் தமிழ் வளர்கின்றது. யாதொரு நிலையம் தமிழை வளர்க்குமோ வாழ்த்துமோ அந் நிலையம் வளர்க் வாழ்க என்று பாராட்டுவது நம் தமிழ்ப் பிறப்பின் பயனாகும்.

"இப் பொழிவுகளைத் தமிழுக்குத் தொடக்கத் திறனாய்வுகள் என்று கூறலாம். இவற்றால் தமிழ் இலக்கியங்கள் பரவும் எனவும் திறன்கலை வளரும் எனவும், எதிர்பார்க்கலாம். சொற்பொழிவு என்பது ஆகுபெயராய் இன்று ஒரு நூல்வகையைச் சுட்டும் வழக்குப் பெற்றுவிட்டது. 'கோவைச் சொற்பொழிவைக் கேட்டேன்' என்ற நடையோடு, கோவைச் சொற்பொழிவைப் படித்தேன் என்று புது நடையும் இந் நாள் தோன்றலாயிற்று. கலம்பகம், உலா, தூதுமுதலான செய்யுள் வகைபோலச் சொற்பொழிவு என்பது உரைநடை வகைகளில் ஒரு கூறாகத் தோன்றியது கண்டும் அதனைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வளர்ப்பது கண்டும் அவ் வளர்ச்சியில் பங்காளிகளாக நீங்கள் இவண் வந்து கூடியிருப்பது கண்டும் பெருமித உவகை கொள்கிறேன்." என்பது அவர்கள் இப் புதுத் துறை குறித்து இயம்புவதாகும். "நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்" என்று சொல்லப்பெற்ற சொல்லும் ஏட்டில் எழுதி வைக்கப்பெற்றமயால் தான் இன்றும் தன்னைப் பறையறைந்து காட்டி, வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நலங்கிள்ளி நவின்ற வஞ்சின மொழியும், பெருங் கோப்பெண்டு கூறிய கையறுநிலை மொழியும், சேரமான் கணைக்கால் இரும்பொறை செப்பிய மானமொழியும் கணியன் பூங்குன்றனார் உரைத்த பொருள்மொழியும் பிறபிறவும் இன்றும் நம் செவியாரக் கேட்கவும், கண்ணாரக் காணவும் வாய்த்தமை அவை பாட்டாகி ஏட்டிலே இடம் பெற்றமையாலேயே ஆம். ஆகலின் கூற்றையும் ஆடல் கொண்டு ஆற்றலொடு நிலைத்து ஒன்றா உலகத்தில் ஒன்றாகிப் பொன்றாமல் நிற்பது ஒலிவடிவன்று, வரிவடிவேயாம். இதனை வளம் பொழியும் இளந்தை நாளிலேயே உணர்ந்து செயலாற்ற ஏக்கம் கொண்ட பெருந்தகை வ.சு.