பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

மாநாடுகளில் பெரும்புலவர்கள் இருபதின்மர் தலைமை ஏற்று உரையாற்றினர். செந்தமிழ் நாவன்மையாளர் 159 பேர்கள் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றினர். இலக்கிய மாநாடு, சாத்திர மாநாடு ஆக இருவகை மாநாடுகளிலும் 140 நூல்கள் ஆராயப்பெற்றன. 'இவையன்றிக் கந்தர் சட்டிச் சொற்பொழிவு' தவத்திரு. ஞானியாரடிகள் பொழிவுத் தொகுப்பாகவும், கழகப் பொன் விழாவின்போது அறிஞர்கள் ஆற்றிய பெரிய புராணப் பொழிவு 'பெரியபுராணச் சொற்பொழிவுகள்' என்னும் பெயராலும் வெளிவந்தன.

முதல் சிற்றிலக்கிய மாநாட்டில் உலா கலம்பகம் தூது ஆகியனவும் இரண்டாம் சிற்றிலக்கிய மாநாட்டில் பிள்ளைத் தமிழும், மூன்றாம் சிற்றிலக்கிய மாநாட்டில் பரணி பள்ளு குறவஞ்சி ஆகியவையும், நான்காம் சிற்றிலக்கிய மாநாட்டில் கோவையும், ஐந்தாம் சிற்றிலக்கிய மாநாட்டில் அந்தாதியும், ஆறாம் சிற்றிலக்கிய மாநாட்டில் வெண்பா நூல்களும் ஆராய்ந்து பொழியப்பெற்றன.

சென்னையில் 7 மாநாடுகளும், நெல்லைலயில 17 மாநாடு களும் மதுரையில் 1 மாநாடும் ஆக இம் மாநாடுகள் நடத்தப் பெற்றன.

இலக்கிய மாநாடு, சமயம் முதலிய மாநாடுகள் ஆகியவை நிகழும்போதே அம் மாநாட்டுச் சொற்பொழிவு நூல்கள் பொது மக்கள் பெற்றுப் பின்னும் படித்தற்கும் ஆய்தற்கும் ஏற்ற நல்விருந்தாகச் செய்வித்ததுடன் அவ்வத் துறைக்கு மேலும் ஆக்கம் நல்கும் அரிய தீர்ாமனங்கள் சிலவற்றை நிறைவேற்றுதற்கும் வாய்ப்பாக இருந்தது.

சான்றாகக் கலித்தொகை மாநட்டிலே நிறைவேற்றப்பெற்ற தீர்மானங்கள் வருமாறு :

முதலா

முதல் தீர்மானம் : சில நாட்களுக்கு முன்னே முதன் "கச் சென்னையில் பத்துப்பாட்டு மாநாடு கூடி ஒரு நல்ல உணர்ச்சியை ஊட்டிற்று. இப்போது கலித்தொகை மாநாடு கூடிப் பெருங்கிளர்ச்சியைப் பெருக்கிவிட்டது. இப்படியே சங்க நூல்கள் பலவற்றுக்கும் பல மாநாடுகளை அடிக்கடி கூட்டித் தமிழகத்துக்கு மாட்சிமை தேட வேண்டும். இதுவும் மாவட்டங்கள் தோறும் அப்படிச் செய்ய வேண்டும். மேலும் அந்தந்த மாநாட்டின் சொற்பொழிவுகளை முன்னதாகவே அச்சிட்டு அவ்வக் கூட்டத்திலேயே வழங்க வேண்டும் என்பது.