பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 3

புலவர்கள், தமிழில் நம்பிக்கையுடையவர், தமிழ்ப் பற்றுடையவர் எல்லாரும் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் விழாவாக நாம் எண்ண வேண்டும்." என்று வேண்டினார். பொன்விழா மலரைத் தமிழ்நாடு அறநிலையத்துறை ஆணையர்திரு. எம். கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டார். இராசா சர். முத்தையா செட்டியார் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

டாக்டர் வ.செ. குழந்தைசாமி அவர்கள் தம் பாராட்டுரை யிடையே, "இன்று தமிழகத்தில்மூன்று பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டைவிடச் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் மூத்தது. தமிழ்ப்பணியில்- தமிழ் நூல்கள் வெளியிடுவதில் சென்னைப் பல்கலைக் கழகத்தைவிடச் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் மூத்தது என்று கூறுவது உண்மையே தவிர உயர்வு நவிற்சி ஆகாது" என்றார்.

மேலும் அவர், "ஊதிய அடிப்படையில்நூல்களை வெளியிட வேண்டும் என்று சுப்பையாபிள்ளை அவர்கள் கருதியிருப்பார்களானால் இந்த 1600 நூல்களில் ஒன்றுகூட வெளிவந்திருக்காது. ஊதியத்தைக் கருதாமல் - கொள்கைக்காக தனதுமொழி வளரவேண்டும் - தனது இனம் வாழவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு நூல்களை வெளியிடுவது என்ற கொள்கை ஓர் அரசாங்கத்திற்கு இருக்கலாம். ஆனால் ஒரு தனி நிறுவனம் இத்தகைய பணிகளைச் செய்தது என்றால், நான் அறிந்த வரையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தவிர வேறு இல்லை. அதற்கு நன்றி சொல்லத் தமிழ்மக்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றார், கழக ஆட்சியாளர் திரு. வ.சு. இரண்டு விழாக்களிலும் தக்காங்கு நன்றியுரைத்துப் பேசினார்.

மறைமலையடிகள் நூல்நிலையத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா மயிலை இராசேசுவரி திருமண மண்டபத்தில் 4-11-79 காலையில் திரு. ஏ.எம். சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் சீருற நிகழ்ந்தது. அறிஞர்கள் பலர் உரையாற்றினர். மறைமலையடிகள் நூல் நிலைய நூல் நிலைய நூலகர் நூலகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

மாலை நிகழ்ச்சி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.எம். ம். இசுமாயில்அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. அடிகளார் நூலகம், அதனைப் போற்றும் முறை, அடிகளார் நூல்களைக் கற்ற முறை ஆகியவற்றை அருமையாக விரித்துரைத்துச்